சுட்டெரிக்கும் வெயில்...திருச்சி, சேலம், மதுரையில் 103 டிகிரி.. புலம்பும் மக்கள் !
சென்னை: தமிழகத்தில் திருச்சி, சேலம், மதுரை உள்பட 4 நகரங்களில் செவ்வாய்க்கிழமை அதிகபட்சமாக 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மே மாசம் தான் கத்திரி வெயில் கண்ணை கட்டும் ஆனால் இந்தாண்டு ஏப்ரல் மாதத்திலே வெயில் மண்டையை பொளக்க ஆரம்பித்துவிட்டது. இதனால் பகல் நேரத்தில் அனல் காற்றையும் மக்கள் அனுபவிக்கின்றனர். வெளியில் தலை காட்ட முடியாத நிலை. வீட்டுக்குள்ளும் வெக்கை அதிகம்.
என்ன செய்வது எனது தெரியாது மக்கள் புலம்புகின்றனர்.

சென்னை, மதுரை, பாளையங்கோட்டை, கரூர் பரமத்தி, கோவை, சேலம், தருமபுரி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சென்னை, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், பிற்பகல் முதலே அனல் காற்றின் தாக்கமும், புழுக்கமும் காணப்படுகிறது. மார்ச் மாதம் முதல் பல நகரங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவாகி வருகிறது.
இந்த நிலையில், மீண்டும் வெப்பநிலை உயர்ந்து வருகிறது. செவ்வாய்க்கிழமை அதிகபட்சமாக திருச்சி, சேலம், மதுரை, பாளையங்கோட்டை ஆகிய 4 நகரங்களில் அதிகபட்சமாக 103 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பம் நிலவியது. அதற்கு அடுத்தப்படியாக திருப்பத்தூர், தருமபுரி, வேலூர், கோவை ஆகிய நகரங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் நிலவியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை பதிவான வெயில் நிலவரம்
(டிகிரி ஃபாரன்ஹீட்டில்):
திருச்சி 103
சேலம் 103
மதுரை 103
பாளையங்கோட்டை 103
திருப்பத்தூர் 102
தருமபுரி 102
வேலூர் 102
கோவை 101
சென்னை மீனம்பாக்கம் 95
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications