அக்னிக்கு முன்பே தகிக்கும் சூரியன்.. வறுத்தெடுக்கப்படும் வாகன ஓட்டிகள்.. ஃபேன், ஏசிக்கு ஓவர்டைம்
அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே தமிழகம் முழுவதும் வெயில் வாட்டி வதைக்கிறது. மேலும் அனல்காற்று வேறு வீசுவதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
சென்னை: அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே வெயில் தகித்து வருவதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் அக்னி தொடங்கினால் தம் நிலை என்னவாகுமோ என்று பீதியில் உள்ளனர்.
தமிழகம் முழுவதும் தற்போது வெப்பம் தகித்து வருகிறது. வடகினக்கு பருவமழை பொய்த்துபோனதால் ஆங்காங்கே கடும் வறட்சி நிலவி வருகிறது. இதுபோதா குறைக்கு தண்ணீர் பஞ்சமும் ஏற்பட்டுள்ளது.
தினமும் காலிக்குடங்களுடன் மக்கள் வீதிவீதியாக தண்ணீருக்காக அலைந்து திரிந்து வருகின்றனர். இதை போக்க மாநில அரசு எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று தெரிவிக்கின்றனர்.

சதம் அடிக்கும் வெயில்
வேலூர், கரூர், நெல்லை, நாமக்கல், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்கள் வெப்பம் 100 பாரன்ஹீட்டுக்கு மேல் பதிவாகி உள்ளது. பிற மாவட்டங்களில் 90-க்கும் மேல் பதிவாகியுள்ளது. இதனால் வெளியே தலை காட்ட முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.

அனல்காற்று
இந்நிலையில் கொதிக்கும் அளவுக்கு அனல் காற்று வீசுவதால் அலுவல் நிமித்தமாக இரு சக்கர வாகனங்களிலும், பேருந்துகளிலும் செல்லும் மக்கள் அவதி அடைகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பெண்கள் துப்பட்டாவால் முகத்தை மூடியபடி செல்வதை காண முடிகிறது.

நிழலை தேடி அலையும் நிலை
வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் முக்கிய சாலைகளில் கானல் நீர் தோன்றுகிறது. பொதுவாக வெயிலில் இருந்து காத்துக் கொள்ள மரத்தின் நிழல்களை தேடுவது வழக்கம். ஆனால் வர்தா புயலால் சென்னையில் பெரும்பாலான மரங்கள் வேரோடு சாய்ந்துவிட்டதால் தற்போது நிழலைத் தேடி அலைந்து திரியும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

காளான் போல் முளைத்துள்ள கடைகள்
வெயிலின் தாக்கத்தினால் தர்ப்பூசணி, கிர்னி பழம், மோர், இளநீர், பழச்சாறு ஆகியவற்றின் விற்பனை ஜரூராக உள்ளது. இதனால் ஆங்காங்கே காளான் போல் ஜூஸ் கடைகள் முளைத்துள்ளன. சென்னையில் உள்ள சுற்றுலா தலங்கள், வணிக வளாகங்கள், கடற்கரை உள்ளிட்ட பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள் மதிய நேரங்களில் வெறிச்சோடி காணப்படுகிறது. வீடுகளில் மின்விசிறிகள், ஏ.சி. ஆகியவை ஓய்வு இல்லாமல் ஓவர் டைம் பார்க்கின்றன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications