தமிழகத்தின் 10 மாவட்டங்களை வாட்டி வதைத்த வெயில் - வீட்டுக்குள்ளேயே முடங்கிய மக்கள்!
சென்னை: தமிழகத்தில் வெயிலின் தாக்கம் இந்த வாரத்தில் 10 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டி மக்களை வாட்டி எடுத்துள்ளது.
அதிபட்சமாக தர்மபுரியில் வெயில் 105.44 டிகிரி பதிவானது. சென்னையில் மக்கள் வீடுகளுக்குள்ளே முடங்கியுள்ளனர். இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் அனல்காற்று வீசி வருகிறது.
குறிப்பாக மத்திய மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் 104 டிகிரியை தாண்டி கொளுத்தி வருகிறது.

கடும் அனல் காற்று:
தற்போது மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார், ஜார்கண்ட் போன்ற வடமாநிலங்கள் மற்றும் ஓடிசா, தெலங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, புதுச்சேரி, ஆகிய மாநிலங்களில் கடுமையான அனல் காற்று வீசி வருகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட அனல் காற்று வீசும் பகுதிகளில் உள்ள மாநிலங்களில் அடுத்த சில நாட்களுக்கு வெயிலின் கொடுமை அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மக்களுக்கு எச்சரிக்கை:
தமிழகத்தை பொறுத்தரை கடந்த 2 நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மூலமாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

முடங்கிய மக்கள்:
நேற்று தமிழகத்தின் 9 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தியது. சென்னையில் மதியம் வேளையில் மக்கள் வீடுகளிலேயே முடங்கினர்.

குறைந்து போன நடமாட்டம்:
அது மட்டுமல்லாமல் இன்று சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால் வெளியில் செல்வதை தவிர்த்து மக்கள் வீடுகளிலேயே முடங்கினர். நகரின் மையப்பகுதியான அண்ணாசாலையில் மதியம் வேளையில் ஆட்கள் நடமாட்டம் குறைவாக காணப்பட்டது.

வெயில் அளவு:
இன்று காலை நிலவரப்படி தமிழகத்தில் அதிகப்பட்சமாக தர்மபுரியில் 105.44 டிகிரி வெயில் கொளுத்தியது. சேலம் 105.08, கரூர் பரமத்தி 104.9, திருப்பத்தூர் 104, திருச்சி 103.82, பாளையங்கோட்டை 102.74, வேலூர் 102.56, மதுரை ஏர்போர்ட் 102.56, கோயமுத்தூர் ஏர்போர்ட் 101.3, தஞ்சாவூர் 100.4, சென்னை ஏர்போர்ட் 99.32, சென்னை நுங்கம்பாக்கம் 97, கடலூர் 95.72 டிகிரியும் வெயில் வாட்டி எடுத்தது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications