For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புயலே வந்தாலும் மழை இல்லையே.. இந்த 10 மாவட்டங்களில் அடிக்க போகுது அனல் காற்று

10 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அனல்காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

Recommended Video

    TN Weather Update | எங்கெல்லாம் பெய்யும்? சென்னை வானிலை மையம் அறிவிப்பு- வீடியோ

    சென்னை: மழை வர போகுது, புயல் வரப் போகுது என்ற செய்திகள் ஒரு பக்கம் இருந்தாலும், தமிழகத்தில் அனல் காற்றும் பலமாக வீசப் போகிறதாம்.

    தென்மேற்கு பருவமழை எப்பவுமே ஜூன் ஆரம்பத்திலேயே தொடங்கிவிடும். ஆனால் இந்த முறை லேட்டாகவே தொடங்கியது. முதலில் கேரளாவில் ஆரம்பித்தது.

    Heat waves will spread in 10 districts including Puducherry next three days

    அதன் தொடர்ச்சியாக அரபிக்கடலில் இன்று புயல் உருவாகும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அதனால் மீனவர்களையும் 3 நாட்களுக்கு அரபிக்கடல் பக்கம் போக வேண்டாம் என்று சொல்லப்பட்டுள்ளது.

    ஆனால் இந்த புயலால் ஒரு சில கடலோர பகுதிகளில் மட்டும்தான் மழை. மற்றபடி உள் தமிழகத்தில் சொல்லிக் கொள்ளும்படி மழை இருக்காது.

    செம டிவிஸ்ட்.. நன்னடத்தை அடிப்படையில் சசிகலாவை விடுவிக்கலாம்.. கர்நாடக சிறைத்துறை பரிந்துரை செம டிவிஸ்ட்.. நன்னடத்தை அடிப்படையில் சசிகலாவை விடுவிக்கலாம்.. கர்நாடக சிறைத்துறை பரிந்துரை

    மழை இல்லை என்பதைவிட அனல் காற்று வீசும் என்ற தகவல்தான் இப்போது வந்துள்ளது. அதிலும், 10 மாவட்டங்களில் அனல் காற்று பலமாக இருக்குமாம்.

    திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கடலூர், வேலூர், விழுப்புரம், பெரம்பலூர், திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு அனல்காற்று வீசும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    சென்னைவாசிகள் நிலைமை பரிதாபம்தான். ஏற்கனவே தண்ணீர் பஞ்சத்தில் தவிக்கும் நிலை உள்ளது. இதில், கடலில் புயலே வந்தாலும், சென்னையில் மழை இல்லை என்பது ஏமாற்றமாக உள்ளது. அதிலும் அனல் காற்று வீசும் மாவட்டங்களில் முதலில் உள்ளது சென்னைதான்!

    English summary
    Heat waves spread in 10 Districts like Trichy, Chennai, Kanchipuram, Tiruvannamalai, Vellur, Vizhupuram, Perambalur, Karur, Cuddalore, including Puducheery
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X