முட்டிக் கொண்டு நிற்கும் எட்டு காரணங்கள்.. 2 தொகுதிகளிலும் திமுக வெல்லுமா.. சந்தேகமாமே!
திமுக தொகுதிகளை கைப்பற்றுமா என்பது சந்தேகம் என்கிறார்கள்
Recommended Video
சென்னை: வரும் இடைத்தேர்தலில் 2 தொகுதிகளிலும் திமுக வெற்றிபெறுமா என்பது சந்தேகம்தான் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்! இதற்கு, எட்டு காரணங்கள் முட்டி கொண்டு நிற்பதுதான்!
எம்பி தேர்தல், வேலூர் ஒற்றை தொகுதி தேர்தல்களை போல, இந்த இடைத்தேர்தலிலும் திமுகவுக்கு சாதகமான சூழல் இருக்குமா என்ற கணக்கு போடப்பட்டாலும், நிறைய சிக்கல்கள் அதனை சூழ்ந்து கொண்டுள்ளன. பொதுவாக, இடைத்தேர்தல் என்றாலே ஆளும்தரப்புதான் வெற்றி பெறும் என்பது இயல்பு. இந்த பிம்பம் இந்த முறையும் அதிமுக மேல் உள்ளதுதான் முதல்காரணம்.
போன முறை, ஆட்சி கவிழ்ப்பு நடந்தே தீரும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் பொடி வைத்து பேசினாலும், 13 தொகுதிகளை கைப்பற்றினாலும்.. வெறும் 9 தொகுதிகளை கைப்பற்றி ஆளும் தரப்பு சேஃப் ஆகிவிட்டது. இதனால் ஆட்சிக்கு பாதகம் இல்லாமல் போனது இரண்டாவது காரணம்.

வாக்கு வங்கி
வேலூரில் திமுகவினால், வெறும் 8 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தைதான் பெற முடிந்தது. அதாவது அதிமுகவின் வாக்கு வங்கி அதிகரித்து காணப்பட்டது. இதற்கு காரணம், பாஜகவுடனான உறவை இந்த தேர்தலில் துண்டித்து காட்டியதும், நெருக்கத்தை குறைத்து காட்டியதும்தான்! ஒரு பாஜக கொடிகூட வேலூருக்குள் பறக்க விடாமல் கவனமாக பார்த்து கொண்டதுடன், பாஜக தலைவர்கள் ஒருத்தரையும் பிரச்சாரத்துக்கு கூப்பிடாமல் செய்தது. இதன்மூலம் பாஜக கூட்டணியை துண்டிப்பது போல காட்டிக் கொண்டு தொகுதி மக்களின் நன்மதிப்பை அதிமுக பெற்றதுதான் மூன்றாவது காரணம்.

நிலைப்பாடு
இது போக, பாஜக எதிர்ப்பு என்பது திமுக தரப்பில் குறைந்து காணப்படுகிறது. இந்தி மொழி போராட்டம் திடீர் வாபஸ், நேற்று மோடி வந்து சென்றதற்கு பலமான எதிர்ப்பின்மை போன்றவைகளும் திமுகவின் நிலைப்பாட்டை தொண்டர்கள் சந்தேகிக்கும் வகையில் உள்ளது நான்காவது காரணம்.

தேனி பார்முலா
மேலும், தேனி பார்முலாவையே இந்த முறையும் அதிமுக 2 தொகுதிகளிலும் கையில் எடுக்க போவதாக தெரிகிறது. ஏனெனில் இப்போதைக்கு 2 தொகுதிகளுமே திமுக, அதன் கூட்டணியில் உள்ளதால், இரண்டில் ஒன்றை கைப்பற்றினாலும் வெற்றி என அதிமுக கணக்கு போடுகிறது. அதனால்தான் களப்பணியில் தீவிரமாக இறங்கி உள்ளது. ஆனால், திமுக இதே தேனி பார்முலாவை அமல்படுத்துமா, தொகுதிக்குள் தாராளங்களை காட்ட முன்வருமா? அப்படியே காட்டினாலும் நாங்குநேரியில் காட்டுமா, வாக்காளர்களை திருப்திப்படுத்துமா என்ற சந்தேகம் தென்படுவது ஐந்தாவது காரணம்.

ஆதரவு
காங்கிரசுக்கு நாங்குநேரி எவ்வளவு பலமோ, அதிமுகவுக்கு விக்கிரவாண்டி அந்த அளவுக்கு பலமாக இருக்கிறது. இதற்கு காரணம், பாமகவும், தேமுதிகவும்தான். இரு கட்சி தலைவர்களும், அதிமுகவுக்கான ஆதரவை அள்ளி வழங்கி உள்ளதால், திமுகவின் வெற்றி இங்கு எடுபடு என்பதே ஆறாவது காரணம்.

வேட்பாளர் ரூபி
இதை தவிர, நாங்குனேரியையே எடுத்து கொண்டாலும், அங்கு லோக்கல் காங்கிரஸ் முட்டி மோதிக் கொண்டு இருக்கிறது. வேட்பாளர் ரூபிக்கு போதுமான ஆதரவு தருவது இதுவரை இல்லை. உள்ளடி வேலை நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இதனால் ஆட்டோமெட்டிக்காகக் அதிமுகவே இங்கு வெற்றி பெற்றாலும் வியப்பில்லைதான். அதேபோல, கூட்டணி கட்சிக்காக திமுக இறங்கி வெற்றி பெற செய்யுமா என்ற சந்தேகமும் ஏழாவது காரணம்.

கமல்
இது எல்லாவற்றிற்கும் மேலாக, தினகரனும்,கமலும் இந்த முறையும் போட்டியிடவில்லை. போன முறையே வேலூரில் அமமுக வாக்குகளை அதிமுகதான் அள்ளி கொண்டது. இந்தமுறையும் இந்த கட்சிகளின் வாக்குகள் அதிமுகவுக்கு சாதகமாக போகவும் வாய்ப்புள்ளதே எட்டாவது காரணம்! இந்த காரணங்களை எல்லாம் கூட்டி கழித்து பார்த்தால்தான் திமுகவுக்கு வெற்றி கிட்டுமா, கிட்டாதா என்பது புலப்படும்!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications