தொடர் மழையால் கடல் அரிப்பு... தூண்டில் வளைவு அமைக்க மீனவர்கள் கோரிக்கை!
தூத்துக்குடி: நெல்லை அருகே உள்ள பெரியதாழை கடற்கரை பகுதியில் பலத்த மழை காரணமாக கடல் சீற்றமாக காணப்படுகிறது. கடல் அரிப்பும் ஏற்பட்டு வருவதால் மீனவர்கள் திண்டாடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பெரியதாழையில் 1000க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகி்ன்றனர். சுமார் 400க்கும் மேற்பட்ட படகுகள் மூலம் இவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெரியதாழையில் கடலில் அடிக்கடி கடல் சீற்றம் ஏற்பட்டு வருவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாமல் திண்டாடி வருகின்றனர். இதுகுறித்து மீனவர்கள் கோரிக்கை வைத்ததன் பேரில் அங்கு இரண்டு தூண்டில் வளைவு அமைக்க தமிழக அரசு ரூ.25 கோடி நிதி ஓதுக்கியது.
இதற்கான பணிகள் தொடங்க இருந்த வேளையில் தூண்டில் வளைவு அமைய உள்ள இடம் தொடர்பாக மீனவர்களுக்குள் பிரச்சனை உண்டாகி பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது.
இதனால் தொடர்ந்து ஏற்பட்டு வரும் கடல் அரிப்பால் ஊருக்குள் கடல் நீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த காரணத்தால் மீனவர்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் அந்த பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக கடலில் சீற்றமாக இருப்பதால் கடல் அலைகள் அக்ரோஷமாக கரையை நோக்கி வந்து செல்கின்றன. இதனால் கரையில் மண் அரிப்பு ஏற்பட்டு வருகிறது.
இந்த மண் அரிப்பால் படகுகளை கரையில் நிறுத்த முடியவில்லை. அவற்றை பாதுகாப்பாக மீனவர்கள் வேறு இடத்துக்கு மாற்றம் செய்தனர். இதனால் பெரியதாழையில் தூண்டில் வளைவு அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
-
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications