சென்னையில் பலத்த மழை: பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்
சென்னை மாவட்டத்தில் பள்ளிகள் வழக்கம் போல இயங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை : தமிழகத்தின் பல மாவட்டங்களிலும், சென்னை மாவட்டத்திலும் நேற்று மாலை முதல் மழை பரவலாகப் பெய்து வருகிறது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதாகவும், இதனால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யும் என்று நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.

வானிலை மையம் குறிப்பிட்டதைப் போலவே, நேற்று இரவு முதல் கன்னியாகுமரி, நெல்லை, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று மாலை சென்னையில் மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்தது. இதனால், அலுவலகங்கள் சென்றவர்கள் வீடு திரும்ப முடியாமல் அவதிப்பட்டனர்.
இந்நிலையில், இரவு முழுவதும் பலத்த மழை பெய்துள்ளது. அடையாறு, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், போரூர், வளசரவாக்கம், மீனம்பாக்கம் உள்ளிட்ட சென்னையின் பல முக்கிய பகுதிகளில் இப்போது வரை கனமழை பெய்து வருகிறது.
கனமழை காரணமாக எட்டு தென்மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், நான்கு மாவட்டங்களில் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால், சென்னையில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல இயங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications