ஒரு நாள் மழைக்கே தாங்காத சென்னை.. ஆங்காங்கே தண்ணீர் தேங்கி மக்கள் அவதி
நீண்ட இடைவெளிக்குப் பிறகு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் மழை பெய்துள்ளது மகிழ்ச்சி அளித்தாலும், ஆங்காங்கே நீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
சென்னை: தமிழகத்தில் மழை பெய்யாததால் ஏரி, குளங்கள், கிணறுகள் வறண்டு தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில் சென்னையில் மழை பெய்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. என்றாலும் ஒரு நாள் மழைக்கே ஆங்காங்கே நீர் தேங்கியுள்ளதால் மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.
தமிழகத்தில் 140 ஆண்டு வரலாற்றில் இல்லாத அளவிற்கு வறட்சி நிலவி வருகிறது. இந்நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுப் புறப்பகுதிகளில் நேற்று இரவு நல்ல மழை பெய்தது.
இதனால் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். என்றாலும், ஒரு நாள் மழைக்கே ஆங்காங்கே நீர் தேங்கி பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

நீண்ட நாளுக்கு பின் மகிழ்ச்சி
சென்னையின் ஒரு சில பகுதியில் பலத்த மழையும் ஒரு சில இடங்களில் லேசான மழையும், சில பகுதிகளில் மழை பெய்யாமலும் இருந்தன. சென்னை மக்களுக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு கிடைத்த மழை என்பதால் சென்னைவாசிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

வெயிலின் தாக்கம் குறைந்து ஹேப்பி
சென்னையில் கடந்த 2 தினங்களாகவே அவ்வப்போது மழை பெய்து வருகிறது. என்றாலும் நேற்றிரவு கனமழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து பூமி குளிர்ச்சி அடைந்துள்ளது.

ஆங்காங்கே நீர் தேங்கி
சென்னையில் பெய்த கனமழையால் பல இடங்களில் சாலைகளில் வெள்ளம் ஓடியது. ஒருசில இடங்களில் மழை நீர் தேங்கி நின்றது. இதனால் வேலைக்கு செல்வோர் சற்று அவதிப்பட்டனர்.

ஒரு நாள் மழைக்கே
ஒரு நாள் பெய்த கனமழைக்கே சென்னை தாங்கவில்லை என்று மக்கள் மத்தியில் புகார் எழுந்தது. அடுத்து வர உள்ள வடகிழக்கு பருவமழையை தாங்கும் அளவிற்கு சென்னையை தயார் படுத்த வேண்டும். மழை நீர் கால்வாய்களில் உள்ள அடைப்புகளை சரி செய்து, மழைநீர் ஓடுவதற்கு ஏற்ற வகையில் சீரமைக்க வேண்டும். குண்டும் குழியுமான பகுதிகளில் புதிய சாலைகளை போட வேண்டும் என்று சென்னைவாசிகள் கோரியுள்ளனர்.
-
தென்மேற்கு பருவமழை தாமதமாவது ஏன்? புதிய தேதியை அறிவித்த வானிலை மையம்.. அதிகரிக்கும் எல் நினோ அச்சம்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
இந்தியாவை பந்தாட வரும் பிரச்சனை.. எல் நினோ + ஹார்முஸ் நெருக்கடி.. RBI-க்கு தலை சுற்றுகிறது! -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications