கன மழை: தமிழகத்தில் 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
சென்னை: தமிழகத்தில் கன மழை தொடருவதால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்துக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கையை ஒட்டிய பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலை கொண்டிருந்தது. இந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி சற்று நகர்ந்து தெற்கு இலங்கைக்கு அருகில் நிலை கொண்டுள்ளது.

இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியின் காரணமாக தமிழகம், புதுவையின் கடலோரப் பகுதிகளில் பலத்த மழையோ மிக பலத்த மழையோ இன்று பெய்யும். உள்மாவட்டங்களில் ஆங்காங்கே பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் மதுரை, ராமநாதபுரம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ச்சியாக நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது. இதனால் தஞ்சாவூர், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தின் காரைக்கால் மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்த மாவட்டங்களில் கனமழை நீடிப்பதால் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
-
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications