உருவானது புயல்: கடலூர், விழுப்புரத்தில் கனமழை; கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
கடலூர்: வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. மீனவர்களை எச்சரிக்கும் விதமாக கடலூர்,புதுவை துறைமுகத்தில் 1-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
அந்தமான்- நிக்கோபர் தீவு கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருக்கிறது. இது புயலாக உருவாக வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் இடி-மின்னலுடன் பரவலாக கனமழை பெய்தது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, செஞ்சி, திருநாவலூர் மற்றும் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை கொட்டி தீர்த்தது. மயிலம், தியாகதுருகம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் மழை பெய்தது.

கடலூர், நெல்லிக்குப்பம் பகுதிகளில் இரவு 8 முதல் நள்ளிரவு 12 மணி வரை இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் நகர் பகுதியில் முழங்கால் அளவுக்கு மழைநீர் பெருகியது. எனவே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடலூரில் கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்பட்டன. கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
பண்ருட்டியில் இரவு 9 முதல் 11 மணி வரை இடி-மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. மின்னல் தாக்கி சுமார் 20 வீடுகளில் மின்விசிறி, மின்விளக்குகள் நாசமாகின. தரைவழி தொலைபேசிகள் செயலிழந்தன. விருத்தாசலம், நெய்வேலி உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மழை பெய்தது.
புதுச்சேரியிலும் கனமழை
புதுவையில் இரவு விட்டு விட்டு நள்ளிரவு வரை மழை பெய்தது. இதனால் இரவு முழுவதும் குளிர்ச்சியான நிலை நிலவியது. இன்று காலையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. கடலில் அலைகள் சீற்றத்துடன் எழுந்தன. புதுவை துறைமுகத்திலும் 1-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications