வெப்பச்சலனத்தால் தமிழகத்தில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சென்னை: வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஆகஸ்ட் மாத இறுதியில் இருந்து விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. செப்டம்பர் மாதம் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. அதுபோல அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

இதனிடையே வங்கக் கடலில் தென்மேற்கு திசையில் நிலைக் கொண்டிருந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, சற்று மேற்கு திசையில் நகர்ந்து, தற்போது மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவி வருவதால் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், தமிழகம் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் தலா 6 செமீ மழை பதிவாகி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறையில் 5 செமீ மழையும், வேலூர் மாவட்ட சோளிங்கர், கிருஷ்ணகிரி மாவட்டம் பையூர் 4 செமீ மழை பெய்துள்ளது
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications