2 நாட்களுக்கு கனமழை கொட்டப்போகுதாம்... எச்சரிக்கும் வானிலை மையம்
வடதமிழகத்தின் சில இடங்களில் கனமழை மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது
சென்னை: வளிமண்டலத்தில் மேல் அடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதால் வடதமிழகத்தின் சில இடங்களில் இன்று கனமழை மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
மத்திய மேற்கு வங்க கடலில் காற்று மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ஆந்திரா கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலையால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கடந்த 2 தினங்களாக கனமழை பெய்கிறது. நேற்றும் பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
சென்னையில் இன்று காலை லேசான சாரல் மழை பெய்தது. இதனால் வழக்கத்தைவிட காலை நேரத்தில் குறைந்த வெப்பநிலை பதிவாகி, இதமான சூழ்நிலையை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து மழை நின்றுவிட்ட நிலையிலும் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், மத்திய மேற்கு வங்க கடலில் காற்று மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறினார்.
செப்டம்பர் 27ம் தேதி வரை வட தமிழகம், புதுச்சேரியில் பல இடங்களிலும், தென்தமிழகத்தின் சில இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, அதன்சுற்றுவட்டார பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications