சென்னை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பலத்த மழை!
சென்னை: சென்னை, காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று இரவில் கனமழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகத்தில் வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால், இந்தாண்டு மார்ச் மாதத்திலேயே வெப்பம் தகித்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். பகல் நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத அளவிற்கு தவித்து வந்தனர்.

இந்நிலையில் சென்னையில் நேற்று லேசான சாரல் மழை பெய்தது. அதேசமயம் இரவு நேரத்தில் பலத்த மழை பெய்தது. கிண்டி, ஆலந்தூர், ஈக்காட்டுத்தாங்கல், கந்தன்சாவடி, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், வடபழனி, தி.நகர், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை கொட்டியது.
திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, பட்டினப்பாக்கம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்தது.
தாம்பரம், பல்லாவரம், கிண்டி ஆகிய பகுதிகளில் இரவில் நல்ல மழை பெய்தது. அதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மாமல்லபுரம், திருக்கழுங்குன்றம், பம்பல், தாம்பரம், காட்டாங்குளத்தூர், செங்கல்பட்டு, வண்டலூர், பாப்மாமல்லபுரம் பகுதிகளிலும் மழை கொட்டித் தீர்தது.
-
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
இந்தியாவை பந்தாட வரும் பிரச்சனை.. எல் நினோ + ஹார்முஸ் நெருக்கடி.. RBI-க்கு தலை சுற்றுகிறது! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications