தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை.. சென்னைக்கு மிக அருகில் சூறாவளியுடன் கூடிய மழை!

தமிழகத்தில் இன்று காலையில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை

    சென்னை: தமிழகத்தில் இன்று காலையில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

    தமிழகத்தில் தற்போது கோடை மழை பெய்து வருகிறது. மிகவும் மோசமான வெயில் அடித்து வந்த நிலையில் மக்களை குளிர்விக்கும் வகையில் கடந்த இரண்டு நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.

    உள்கர்நாடகா முதல் குமரி வரை காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வருகிறது. இது தற்போது வலுவடைந்துள்ளது.

     மழைக்கு காரணம்

    மழைக்கு காரணம்

    உள்கர்நாடகா முதல் குமரி வரை நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலைதான் இந்த மழைக்கு காரணம். அதேபோல் வெப்பச்சலனமும் ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தை நோக்கி வலுவான காற்று வீசி வருகிறது. இந்த காற்று தமிழகத்தில் கோடை மழையை உருவாக்கி உள்ளது.

     எங்கு எல்லாம்

    எங்கு எல்லாம்

    இதனால் தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில்தான் மிகுந்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. ஈக்காடு, காக்களூர் உள்ளிட்ட கிராமங்களில் சூறாவளியுடன் பலத்த மழை பெய்து வருகிறது. மழையால் இந்த பகுதிகளில் மொத்தமாக மின்சாரம் நிறுத்தப்பட்டு உள்ளது.

     மிக கனமழை

    மிக கனமழை

    இந்த நிலையில் சென்னைக்கு மிக அருகே வரை மழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல இடங்களில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம் சென்னை எல்லையிலும் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. ஆனால் சென்னையில் மழை பெய்யவில்லை.

    மாலை

    மாலை

    இதேபோல் இன்று மாலைக்கு மேல் திருவாரூர், நாகை, கடலூர் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. டெல்டா மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ஆனால் சென்னையில்வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சேலம் மழை

    சேலம் மழை

    அதேபோல் தற்போது சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. சேலத்தில் கடந்த ஒரு வாரமாகவே விட்டு விட்டு மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. காலையில் இருந்து அங்கு பெத்தநாயக்கன் பாளையம், சிங்கிபுரம், பேலூர் ஆகிய இடங்களில் மழை பெய்து வருகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+