தணிந்தது வெப்பம்... கோடை மழை நீடிக்கும் - வானிலை மையம்
தமிழகத்தில் வெப்பம் தணிந்து கோடை மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, வால்பாறை, கொடைக்கானல் போன்ற இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் மார்ச் முதலே வெப்பம் தகித்த நிலையில் கடந்த சில நாட்களாக 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் குறைவாகவே வெப்பம் பதிவாகியுள்ளது. தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கோடை மழை கொட்டி வருகிறது.

இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு:
வெப்ப சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 ஒரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்தடன் காணப்படும். அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னையில் மழைக்கு வாய்ப்பு இல்லை.
நீலகிரி, வால்பாறை, கொடைக்கானல் போன்ற பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொடைக்கானலில் 9 செமீ நாங்குநேரியில் 5 செமீ, வால்பாறையில் 4 செமீ மழை பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் குறைவாகவே இருக்கும் என்றும், தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications