காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரலாறு காணாத கனமழை... வெள்ளத்தில் சிக்கிய 170 பேர் மீட்பு
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரலாறு காணாத கனமழை பெய்து வருகிறது. இதனால் நகரே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த பல வருடங்களாக இல்லாத அளவிற்கு இந்தாண்டு கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக 8 ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டது.
வெள்ளநீரால் கரையோர பகுதிகல் பாதிக்கப்பட்டன. விரைந்து செயல்பட்ட மாவட்ட நிர்வாகத்தினரால், வெள்ளத்தில் சிக்கிய 170 பேர் மீட்கப்பட்டனர்.

மழை வெள்ளத்தால் பாதித்த பகுதிகளை அம்மாவட்ட ஆட்சியாளர் கஜலட்சுமி நேரடி ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ‘காஞ்சிபுரம் மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டன. நகரத்தை சுற்றியுள்ள நத்தப்பேட்டை, புத்தேரி, நெட்டேரி, செவிலி மேடு, ஆகிய பகுதிகளில் அதிகளவு மழை பெய்துள்ளது.
தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகத்தின் சார்பினில் ஆயிரம் பேரும் காவல்துறை மற்றும் தீயணைப்பு மீட்பு பணிதுறை சார்பினில் 275 பேரும் தேவையான பாதுகாப்பு உபகரணங்களுடன் மீட்பு பணியில் ஈடுபட்டு பிள்ளையார்பாளையம், மடம்தெரு, பள்ளத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 170 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 7294 நபர்கள் 26 பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மழை பாதிப்பு குறித்து பொது மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள 044-27237107, 044-27237207 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்' என்றார்.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications