கொளுத்திய கோடைக்கு இதமாக கோவை, தேனியில் கொட்டிய மழை !
கோவை: தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் கோவை, தேனி மாவட்டங்களில் நேற்று மாலையில் பெய்த மழை, அனலில் தவித்த மக்களை குளிர்வித்துள்ளது. விவசாயிகளும் மகிழச்சி அடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளது. கடந்த சில நாட்களாக பல நகரங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவாகி வருகிறது.

அனல் காற்றும் வீசுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பகல் வேளைகளில் பொதுமக்கள் வெளியே வரவே அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. மாலை 6 மணிக்கு சூரியன் மறைந்த பிறகும் பகலில் அடித்த வெயிலின் தாக்கம் காரணமாக அனலாக உள்ளதால் வீட்டில் இருப்பவர்கள் கூட புழுக்கத்தில் தவிக்கும் நிலை காணப்படுகிறது.
கோவையில் கடந்த சில வாரங்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில் கோவை, பொள்ளாட்சி, மேட்டுப்பாளையம் ஆனைமலை, ஆழியாறு உள்ளிட்ட இடங்களில் நேற்று மாலை திடீரென மழை பெய்தது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பலத்த காற்றுடன், இடி மின்னலுடன் சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது.
கோவை டவுன்ஹால், ரேஸ்கோர்ஸ், லட்சுமி மில்ஸ், ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. இதனை அடுத்து கோவை மாவட்டத்தின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாயினர். வாகன ஓட்டுனர்களும் மிகவும் சிரமப்பட்டனர்.
அதேபோல் தேனியில் அல்லிநகரம் உள்ளிட்ட இடங்களில் நேற்று மாலையில் கனமழை கொட்டியது. இதனால் வெயிலில் தவித்து வந்த மக்கள் சற்று ஆறுதல் அடைந்தனர். விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.
-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications