கிருஷ்ணகிரியில் வெள்ளத்தினால் மூழ்கிய தரைப்பாலம்... மக்கள் அவதி - வீடியோ
கனமழையின் காரணமாக கிருஷ்ணகிரியிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் ஓதிக்குப்பத்தில் தரைப்பாலம் மூழ்கியதால் மக்கள் போக்குவரத்துக்கு வழியின்றி அவதிப்படுகின்றனர்.
Subscribe to Oneindia Tamil
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓதிக்குப்பம் ஏரி 12 வருடங்களுக்குப் பிறகு நிரம்பி நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் தரைப்பாலம் நீரில் மூழ்கி உள்ளது.இதனால் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. சில வாரங்களுக்கு முன்னதாகவே கேஆர்பி அணை நிரம்பிவிட்டது. அதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள், குளங்கள் நிரம்பிவிட்டன.

இந்நிலையில், 12 ஆண்டுகளுக்குப்பிறகு ஓதிக்குப்பம் ஏரி நிரம்பியுள்ளது. அதனால் அருகில் உள்ள பகுதிகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் தரைப்பாலம் மூழ்கிவிட்டது. இதனால் பொதுமக்கள் 10கி.மீ தூரம் சுற்றி கிருஷ்ணகிரிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.












Click it and Unblock the Notifications