For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தென் மாவட்டங்களில் வெளுத்தெடுக்கும் கன மழை.. 3 மாவட்டங்களில் நேற்றிரவு முதல் மழை

Google Oneindia Tamil News

மதுரை: தமிழகத்தின் தென் பகுதிகளான ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.

இன்று மாலை வரை விடாமல் பல பகுதிகளில் மழை பெய்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த மாவட்டங்களில் கடல் கொந்தளிப்பாக இருப்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்குப் போகவில்லை.

Heavy rain lashes three southern districts of Tamil Nadu

தூத்துக்குடியில் நவம்பர் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் மிகப் பெரிய வெள்ளம் வந்து பல குடியிருப்புகளை மூழ்கடித்தது. அதேபோல டிசம்பர் 19, 20 ஆகிய தேதிகளில் மீண்டும் பலத்த மழை பெய்தது. இந்த நிலையில் மீண்டும் கன மழை பெய்வதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3.5 செமீ மழை பெய்துள்ளது.

ராமேஸ்வரத்தில் 67.2 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. தங்கச்சிமடம், பாம்பன் பகுதிகளில் முறையே 51, 38 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. அங்கு மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறையும் அறிவுறுத்தியுள்ளது.

இதேபோல், நெல்லை மாவட்டத்தில் பாபநாசத்தில் 23 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

English summary
Coastal districts like Ramanathapuram, Tuticorin and Tirunelveli in Tamil Nadu have received heavy rain since Sunday night. Rain was continuing in several places in these districts even on Monday evening.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X