பலத்த மழை: 7 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
சென்னை: வட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், தமிழகத்தில் நாகை, திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் புதுவையில் காரைக்கால் ஆகிய மாவட்ட பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வட மேற்கு திசையில் நகர்வதால் தமிழக கடலோரப் பகுதியில் மேலும் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தென் கிழக்கு திசையில் இலங்கை-அந்தமான் இடையே காற்றழுத்தம் உருவானது. அது மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவானது. அதன் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக வட மாவட்டங்களில் நல்ல மழை தொடர்கிறது.
இந்நிலையில், வங்கக் கடலில் தென் மேற்கு திசையில் நகர்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது. இது மேலும் வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் கடலோர மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும். இதையடுத்து அந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுப்பெற்று மேற்கு திசையில் நகரும். அப்படி நகரும் போது கடலோரப் பகுதியைப் போல உள் தமிழகத்திலும் கனமழை பெய்யும். இது இரண்டு நாட்களுக்கு நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications