சென்னையில் திடீரென குறைந்த வெயில்.. கும்மிடிப்பூண்டியில் கன மழை...!
சென்னை: சென்னயைில் இன்று பிற்பகலுக்கு மேல் பெரும்பாலான பகுதிகளில் திடீரென வெயில் அடியோடு குறைந்து விட்டது. படு புழுக்கமாக இருந்து வருகிறது. இதனால் மழை வருமா என்ற எதிர்பார்ப்பில் மக்கள் ஆவலோடு காத்துக் கொண்டுள்ளனர்.
அதேசமயம், சென்னைக்கு அருகே கும்மிடிப்பூண்டியில் சுமார் அரை மணி நேரம் இடி மின்னலுடன் கூடிய கன மழை கொட்டித் தீர்த்ததால் அப்பகுதியில் மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கினர்.

இந்த ஆண்டு கோடைகாலம் தொடங்கியதிலிருந்தே அனல் பறந்து வருகிறது. சராசரியாக 100 டிகிரியைத் தாண்டி பெரும்பாலான பகுதிகளில் வெளுத்து வாங்குகிறது வெயில்.
தற்போது அக்னிநட்சத்திரம் வேறு தொடங்கி விட்டதால் வெயில் கடுமையாகவே இருக்கிறது. இந்த நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது. வெப்பச் சலனம் காரணமாக இடியுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அது கூறியிருந்தது.
இந்தப் பின்னணியில் கும்மிடிப்பூண்டியில் இன்று பிற்பகலுக்கு மேல் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக இடி மின்னலுடன் பேய் மழை பெய்து மக்களை மகிழ்வித்தது. இதனால் அப்பகுதியில் புழுக்கம் அடியோடு குறைந்தது.
அதேசமயம் சென்னையில் 3 மணிக்கு மேல் வெயில் அடியோடு குறைந்தது. புழுக்கம் அதிகரித்தது. லேசான காற்று வீசி வருகிறது. இதனால் மழை வருமா என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.
இதற்கிடையே ஊட்டியில் 1 மணி நேரமாக பலத்த மழை பெய்து விவசாயிகள் மற்றும் பொதுமக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயில் கொடுமை! உடல் சூட்டை தணிக்கும் 5 அற்புத உணவுகள்! இளநீர் குடிக்கும் போது அந்த தவறை செய்யாதீங்க! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications