ஓகி புயலுக்கு கொட்டித்தீர்த்த மழை - எங்கெங்கு எவ்வளவு மழை தெரியுமா?
ஓகி புயல் காரணமாக தென் மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்த்துள்ளது. நெல்லை பாபநாசத்தில் அதிகபட்சமாக 45 செமீ மழை பதிவாகியுள்ளது
Recommended Video

நெல்லை: ஓகி புயலின் தாக்கத்தினால் தமிழகத்தில் 21 மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக நெல்லை பாபநாசத்தில் 45 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
கன்னியாகுமரிக்கு தெற்கே உருவாகியுள்ள ஓகி புயல் காரணமாக, காற்றுடன் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. கன்னியாகுமரி உட்பட தென் தமிழகத்தில் பலத்த மழை பெய்துள்ளது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மழையால் குமரி, நெல்லை,தூத்துக்குடி மாவட்டங்களில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனிடையே ஓகி புயல் லட்சத்தீவு நோக்கி நகர்ந்து விட்டது எனினும் மழை நீடிக்கிறது.

பாபநாசம் 45செமீ மழை
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர்
தமிழகத்தில் அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் 45 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக கூறினார். மணிமுத்தாறில் 37 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது என்றார்.

வானிலை மையம்
கன்னியாகுமரியில் அதிகபட்சமாக கொட்டாரத்தில் 22 செ.மீ, மயிலாடி, புத்தன் அணையில் தலா 18 செ.மீ. மழை பதிவாகியுளளது என்று பாலச்சந்திரன் கூறினார்.

வட தமிழகத்தில் மழை
அந்தமானுக்கு தெற்கே வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்த தாழ்வு பகுதி அடுத்த 2 நாட்களில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும், அடுத்த 4 நாட்களில் வட தமிழகத்தை நோக்கி தாழ்வு மண்டலம் நகரும் என்றும் அவர் தெரிவித்தார்.

4% மழை குறைவு
ஓகி புயலால் தமிழகத்தில் 21 மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. பல மாவட்டங்களில் கனமழையும், மிக கனமழையும் பெய்துள்ளது. எனினும் வடகிழக்குப் பருவமழை 4% குறைவாகவே பெய்துள்ளதாக பாலச்சந்திரன் தெரிவித்தார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications