கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும்.. வானிலை ஆய்வு மையம் வார்னிங்
Recommended Video

சென்னை: தமிழகத்தின் 5 மாவட்டங்களில், அடுத்த இரு நாட்களில் மிக பலத்த மழை பெய்ய கூடும் என்று, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி மற்றும் நெல்லை ஆகிய 5 மாவட்டங்களின் மலையோர பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு மிக பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், இந்த எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வடமேற்கு வங்கக்கடலில் நேற்று உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிப்பதே இந்த மழைக்கு காரணம்.
கேரளாவில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அதன் தாக்கம் அதிகரித்துள்ளது.
அடுத்த 2 நாட்களுக்கு அந்தமான் கடற்பகுதி உட்பட மத்திய மற்றும் வடக்கு வங்க கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பிற மாவட்டங்களில் லேசானது முதல், மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications