சென்னையின் பலத்த காற்றுடன் கனமழை- தணிந்தது வெப்பம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு காற்றுடன் கூடிய கன மழை பெய்தது. எழும்பூர், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், ஆலந்தூர், மேடவாக்கம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் காற்றுடன் கனமழை பெய்தது.

தென்மேற்குப் பருவமழையால் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த சில நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

Heavy rains combined with strong winds affected in Chennai

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில நேரங்களில் இடியுடன் மழை பெய்யலாம் என்றும் வானிலை ஆய்வுமையம் எச்சரித்தது.

இதன்படி, நேற்றிரவு சென்னையிலும் புறநகர் பகுதிகளிலும் ஒருமணி நேரம் கனமழை பெய்தது. கிண்டி, செங்குன்றம், மாதவரம், சூளைமேடு, எழும்பூர், சைதாப்பேட்டை, மீஞ்சூர், பொன்னேரி, ராயப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் பலத்த காற்றுடன்கூடிய மழை கொட்டியதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது.

சென்னையை ஒட்டியுள்ள தாம்பரம், பல்லாவரம், சேலையூர், குரோம்பேட்டை, மேடவாக்கம், பள்ளிக்கரணை உள்ளிட்ட காஞ்சிபுரம் மாவட்டப் பகுதிகளிலும் மழை பெய்தது.

கடலில் ஏற்கெனவே உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சியால் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. மழையால் வெப்பம் சற்றே தணிந்து குளிர் காற்று வீசி வருகின்றது.

இதற்கிடையே வங்கக்கடலில் 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக இருப்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரு சில இடங்களில் மழையும், இடியுடன் கூடிய மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+