தமிழகத்தில் மழை நீடிக்கும், இந்த ஆண்டு சராசரியை விட அதிக மழை பெய்துள்ளது- ரமணன்
சென்னை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை லட்சத்தீவு - மாலத்தீவு அருகே நீடிப்பதால் தமிழகம், புதுச்சேரியில் மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்தார். தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை சராசரி அளவை விட இந்த ஆண்டு கூடுலாக பெய்துள்ளதாகவும் ரமணன் கூறியுள்ளார்.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரண மாக தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தமிழகம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளன. நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. கடலோர மாவட்டங்கள் மட்டுமல்லாது உள்மாவட்டங்களும், தென் மாவட்டங்களும் நீரில் மிதக்கின்றன. இந்த நிலையில் தமிழகத்தில் கனமழை 24 மணிநேரத்திற்கு தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன்,
இலங்கை அருகே தென்மேற்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை குமரிக்கடலில் நிலை கொண்டிருந்தது. இந்த காற்றழுத்த தாழ்வு நகர்ந்து மாலத்தீவு கடல்பகுதிக்கு நகர்ந்துள்ளது. இதன்காரணமாக தமிழகம், புதுச்சேரியில் 24 மணிநேரத்திற்கு மழை தொடர வாய்ப்புள்ளது.
கடலோர மாவட்டங்களில் கனமழை நீடிக்கும், உள் மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் மழை தொடரும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், அவ்வப்போது கனமழை பெய்யும். தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை சராசரி அளவை விட கூடுதலாக பெய்துள்ளது. இந்த ஆண்டு கடந்த அக்டோபர் 1ம்தேதி முதல் இன்றுவரை 47 செ.மீ அளவு மழை சராசரியாக பதிவாகியுள்ளது. மூன்றுமாதத்தில் பெய்யவேண்டிய மழை ஒரு மாதத்தில் பெய்துள்ளது என்றும் ரமணன் தெரிவித்தார்.
-
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications