கொட்டித் தீர்க்கும் மழை: 'நவம்பர் ரிப்பீட்' ஆகிவிடுமோ என பயத்தில் சென்னைவாசிகள்
சென்னை: குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக வெளுத்து வாங்கும் மழையை பார்த்த சென்னை மக்களுக்கு கோடை வெயில் தணிந்த மகிழ்ச்சியை விட மீண்டும் வெள்ளம் வந்துவிடுமோ என்ற பயம் தான் அதிகம் உள்ளது.
கடந்த நவம்பர் மாதம் சென்னையில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சென்னை வெள்ளத்தில் மிதந்தது. வீடுகளில் சிக்கிய மக்களை படகுகள் மூலம் மீட்கும் அளவுக்கு நிலைமை மோசமானது.
அந்த பாதிப்பில் இருந்து சென்னை மக்கள் மெல்ல மெல்ல மீண்டு வந்துள்ளனர்.

தொடர் மழை
கத்திரி வெயிலை தாங்க முடியாமல் திணறிய சென்னை மக்களை மகிழ்விக்கும் வகையில் மழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரமணாக சென்னை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

புயல்
இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு அருகே 90 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பயம்
தொடர்ந்து பெய்து வரும் கனமழையை பார்க்கும் சென்னை மக்களுக்கு கத்திரி வெயிலின் கொடுமையில் இருந்து தப்பிய மகிழ்ச்சியை விட எங்கே மீண்டும் வெள்ளம் வந்து வீடுகள் மூழ்கும் நிலை ஏற்படுமோ என்ற பயம் தான் அதிகம் உள்ளது.

மழை
நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் தற்போது பெய்யும் மழையின் தீவிரம் குறைவு என்றாலும் சென்னைவாசிகளை பயம் ஆட்கொண்டுள்ளது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். தண்ணீர் தேங்கும் பகுதிகளில் மக்களை மீட்க 25 படகுகள் தற்போதே தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications