சென்னை வடபழனியில் இருந்து கோயம்பேடு வரை கடும் போக்குவரத்து நெரிசல் !
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிக பேருந்துகள் இயக்கப்படுவதால் சென்னை வடபழனியில் இருந்து கோயம்பேடு பேருந்து நிலையம் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
பொங்கல் தினத்தை கொண்டாடுவதற்கு சொந்த ஊர் செல்ல, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து அனைத்து மாவட்ட தலைநகரங்கள் மற்றும் மாநிலத்தின் முக்கிய ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அதன்படி 9 ஆம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னை வடபழனியில் இருந்து கோயம்பேடு பேருந்து நிலையம் வரை கடும் போக்குவரத்து நெரிசல் தற்போது ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் நீண்ட வரிசையில் ஊர்ந்து செல்லும் நிலை உருவாகி உள்ளது. அதேபோல் ஆம்னி பேருந்துகளும் அதிக அளவில் இயக்கப்படுவதால் மதுரவாயலில் இருந்து கோயம்பேடு பேருந்து நிலையம் வரை பேருந்துகள் அணிவகுத்து நிற்கின்றனர்.
ஒரே நேரத்தில் வெளியூர்களில் இருந்து சென்னைக்கு சிறப்பு பேருந்துகள் வந்து குவிந்துள்ளதால் இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு உள்ளே செல்லும் பேருந்துகளும் நெரிசலில் சிக்கியுள்ளதால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications