கனமழை எதிரொலி: ஸ்தம்பித்தது சென்னை மாநகரம்... பொதுமக்கள் பெரும் அவதி!
சென்னை: கனமழையால் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை அடுத்து, சென்னை நகரமே ஸ்தம்பித்தது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
சென்னையில் நேற்று மாலை சுமார் 3 மணிநேரத்திற்கும் மேல் கனமழை பெய்தது. இதனால் சென்னையில் முக்கிய சாலைகளில் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பூந்தமல்லி நெடுஞ்சாலை, கோயம்பேடு புரசைவாக்கம், ராதாகிருஷ்ணன் சாலை, தி.நகர், வடபழனி, அண்ணசாலை, எழும்பூர், கிண்டி, ராயப்பேட்டை, டிடிகே சாலை, சென்ட்ரல், கோடம்பாக்கம் சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஓஎம்ஆர் சாலையிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வடபழனியில் இருந்து போரூர் செல்லும் ஆற்காடு சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பேருந்து மற்றும் மற்ற வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. இதனிடையே தாழ்வான பகுதிகளில் உள்ள சாலைகளில் இரண்டு அடி உயரத்துக்கு மழை நீர் தேங்கி நின்றதால் வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
அண்ணா சாலையில் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான வாகனங்கள் தேங்கி நின்றதால் நாலாபுறமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு எந்த பக்கமும் வாகனங்கள் செல்ல முடியாமல் ஸ்தம்பித்தது. அலுவலகம் சென்றவர்கள் வீடு திரும்பமுடியாமல் பெரும் தவித்தனர். இதையடுத்து போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்தனர். பின்னர் இரவு 12 மணிக்கு மேல் போக்குவரத்து சரிசெய்யப்பட்டு வாகனங்கள் சிரமம் இன்றி இயக்கப்பட்டன.
இந்நிலையில், பொதுமக்களின் நலன் கருதி இரவு நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்தது. கோயம்பேடு-தாம்பரம், திருவான்மியூர்-கோயம்பேடு, அம்பத்தூர்- கோயம்பேடு உள்ளிட்ட தடங்களில் கூடுதல் பேருந்துகளை இரவு நேரங்களில் இயக்க முடிவு செய்துள்ளதாக மாநக போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் வேண்டுகோளாக உள்ளது.
-
சென்னையின் மெகா ப்ராஜெக்ட் இதுதான்! மதுரவாயல் டூ துறைமுகம்.. பறக்கும் சாலையில் காத்திருந்த சர்ப்ரைஸ் -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
IT Jobs: 3 பிரிவில் காலியிடங்கள்.. சென்னை உள்பட 2 இடங்களில் மார்ச் 21ல் இண்டர்வியூ.. ரெடியா? -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள்












Click it and Unblock the Notifications