தமிழக எல்லையில் கொட்டித் தீர்க்கும் மழை... வெள்ளம் கரைபுரண்டோடும் பாலாறு
தமிழக எல்லையில் கொட்டித் தீர்க்கும் மழையால் பாலாற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது.
வேலூர்: தமிழக-ஆந்திர எல்லையில் கொட்டித் தீர்த்து வரும் மழையால் பாலாற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வறட்சியான மாவட்டங்களில் ஒன்று வேலூர் மாவட்டம். இங்கு கடந்த 2005 மற்றும் 2015-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பெய்த கன மழை காரணமாக, பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு தீர்ந்ததுடன், நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர்ந்தது.

இதனால் கடந்த ஆண்டு போதிய மழை பெய்யாவிட்டாலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படவில்லை. தற்போது இரு வாரங்களாக நல்ல மழை பெய்ததால் வாணியம்பாடி பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
வேலூர் அருகே கொணவட்டம் வரையில் பாலாற்றில் சனிக்கிழமை பிற்பகலில் நீர் வந்தது. இதனால் மனம் மகிழ்ந்த அப்பகுதி மக்கள் மலர்தூவி தண்ணீரை வரவேற்றனர்.
இந்த நீர் சனிக்கிழமை இரவு புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள பாலாற்றுப் பகுதிக்கும் வந்தது. இத்தனை வெள்ளப்பெருக்குக்கு பிறகும், வேலூரின் முக்கிய நீராதாரமான சதுப்பேரியில் தூர்வாரப்படாததால் நீர் செல்ல முடியவில்லை. இதனால் வடகிழக்கு பருவமழைக்குள் கால்வாய்களை தூர்வார வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருவதால் அப்பகுதிகளுக்கு யாரும் செல்ல வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், அண்டைய மாநிலங்களில் கனமழையால் வேலூர் மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது.
எனவே பொதுமக்கள் அவற்றில் குளிப்பது , செல்பி எடுப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டால் உயிரிழப்பு நேரும் அபாயம் உள்ளதால் அங்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications