வாரிசு சான்றிதழ்.. போலி பத்திரத்தால் சுருட்டிய சொத்து.. நீதிபதி அதிரடி உத்தரவு.. மிரண்ட திருப்பத்தூர்
திருப்பத்தூர்: போலி வாரிசு சான்றிதழ் பெற்று, பத்திரப்பதிவு செய்த தாசில்தார் உட்பட 13 பேர் மீது வழக்கு பாய்ந்துள்ளது.. இந்த அதிர்ச்சி சம்பவம் திருப்பத்தூர் மாவட்டத்தில் நடந்துள்ளது.
நிலத்தை வாங்கி விற்பதற்கு பத்திரங்கள் என்பது மிகமிக அவசியமானது.. அதனால்தான், போலி பத்திரங்களை தயார் செய்து, நிஜ பத்திரிகைபோலவே உருவாக்கி மோசடிகள் அதிகரித்து வருகிறது.

ஆள் மாறாட்டம், போலியான ஆவணங்கள் மூலம் போலி பத்திரப்பதிவுகள் நடைபெறும் பட்சத்தில் அவை கண்டறியப்பட்டால், சார்பதிவாளரோ, பத்திரப் பதிவுத்துறை ஐஜியோ அதனை ரத்து செய்யக் கோரி, கோர்ட்டின் உதவியை சம்பந்தப்பட்டவர்கள் நாடலாம்.. அந்தவகையில், போலி பத்திரப்பதிவை ரத்து செய்யும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு மட்டுமே இதுநாள் வரை இருந்து வந்தது.
தமிழக அரசு: ஆனால், அந்த நிலையை மாற்றி, இனி பத்திரப்பதிவுத்தலைவரே, போலி பத்திரப்பதிவை ரத்து செய்யும் வகையில் அதிகாரம் வழங்கும் பத்திரப்பதிவு திருத்தச் சட்ட மசோதாவை, தமிழக சட்டசபையில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இதன்படி, போலி பத்திரம் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக பதிவாளர் கருதினால், அந்த பதிவை பதிவாளரே தானாக முன்வந்தோ, அல்லது யாரிடமிருந்து வரப்பெற்ற புகாரின் அடிப்படையிலோ, ஏன் அந்த பத்திர பதிவை ரத்து செய்யக்கூடாது? என்பதற்காக காரணத்தை கேட்டு அறிவிப்பை வெளியிட வேண்டும்.
அதுமட்டுமல்ல, அந்த பத்திரத்தை எழுதிக்கொடுத்தவர், பத்திரத்தின் அனைத்து தரப்பினர், தொடர்ச்சி ஆவணம் இருந்தால் அதன் தரப்பினர், பத்திரம் ரத்து செய்யப்பட்டால், அதனால் பாதிக்கப்படக்கூடிய தரப்பினருக்கு இந்த அறிவிப்பை வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. இப்படி போலி பத்திரத்தின் மூலம் ஏமாறுவதை தடுக்க அரசின் சார்பிலும் நடவடிக்கை எடுத்த பிறகும்கூட, இந்த மோசடிகள் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கிறது..
தாசில்தார் மனைவி: இதோ, போலி வாரிசு சான்றிதழ் மூலம் பத்திரப்பதிவு செய்திருக்கிறார் ஒரு தாசில்தார்.. தற்போது, இவர் மீது வழக்கு பாய்ந்துள்ளது.. திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை சேர்ந்தவர் பவானிசங்கர்... இவரது மனைவி பெயர் கமலா.. இவர்களுக்கு குழந்தை இல்லாத காரணத்தினால், திம்மம்பேட்டை அடுத்த நாராயணபுரம் பகுதியை சேர்ந்த இந்திராணி என்பவரை 2வது கல்யாணம் செய்துள்ளார்... பவானிசங்கர் + இந்திராணி தம்பதிக்கு பாலாஜி என்ற மகனும், பேபி என்ற மகளும் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த 2013ம் ஆண்டு பவானிசங்கர் இறந்துவிட்டார். இதையடுத்து, இந்திராணியும், அவரது மகன் பாலாஜியும் சேர்ந்து பவானி சங்கரின் சொத்துக்களுக்கு, தாங்கள் 2 பேர் மட்டுமே வாரிசு என்று சொல்லி உள்ளனர்.. அத்துடன், முதல் மனைவி கமலா, 2வது மனைவியின் மகளான பேபி ஆகியோரை வாரிசாக சேர்க்காமல், "போலி வாரிசு சான்றிதழ்" பெற்றதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், இந்த வாரிசு சான்றிதழை பயன்படுத்தி பவானிசங்கரின் சொத்துக்களை இந்திராணி, பாலாஜி 2 பேரும், பவானி சங்கர் பேரில் இருந்த 2 ஏக்கர் 35 சென்ட் நிலத்தை தங்கள் பெயரில் பதிவு செய்துள்ளனர்.
சான்றிதழ்: இதுகுறித்து அறிந்த பவானி சங்கரின் முதல் மனைவி கமலா, இது குறித்து பத்திரபதிவு தடை செய்ய வேண்டும் என்று தடை மனுவை சார்பதிவாளர் அலுவலகத்தில் அளித்துள்ளார். இதை சார்பதிவாளர் கார்த்திகேயன் ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது. பிறகு, பொய்யான வாரிசு சான்றிதழ் பெற்று நிலத்தை பத்திரப்பதிவு செய்த மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வாணியம்பாடி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் விசாரணை நடத்திய குற்றவியல் நீதித்துறை நடுவர் போலியாக வாரிசு சான்றிதழ் பெற்று நிலத்தை பத்திரப்பதிவு செய்த இந்திராணி, இந்திராணியின் மகன் பாலாஜி, வாரிசு சான்றிதழ் வழங்கும் போது பணியில் இருந்த தாசில்தார் கீதாராணி, துணை தாசில்தார் ஓய்வு பெற்ற ரகுராம கிருஷ்ணன், பத்திரப்பதிவு செய்த சார்பதிவாளர் கார்த்திகேயன், பொய்யான வாரிசு சான்றிதழ் பெற உதவியாக இருந்த மற்றும் சாட்சி கையெழுத்து போட்ட நபர்கள் என 13 பேர் மீது வழக்கு பதிவு செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
வாணியம்பாடி போலீஸ்: இதையடுத்து, வாணியம்பாடி போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.. இந்த புகாரின்பேரில், 2019ம் ஆண்டு வாணியம்பாடி வட்டாட்சியராக பணிபுரிந்து வந்தவரும், இப்போது, மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணை ஆட்சியராக இருப்பருவமான கீதாராணி, துணை வட்டாட்சியராக இருந்து ஓய்வு பெற்ற ரகுராம கிருஷ்ணன், வாணியம்பாடியில் சார்-பதிவாளராக இருந்த கார்த்திகேயன் உட்பட 13 பேர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கையை எடுத்துள்ளனர் வாணியம்பாடி போலீசார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications