அடடா.. ஹெல்மெட் போடாமல் பைக் ஓட்டியதாக பொன். ராதாகிருஷ்ணன் மீது புகார்!
கோவை: கோவையில் ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டியதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மீது போலீஸில் புகார் தரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கோவையில் உள்ள சமூக நீதி கட்சியின் மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் மற்றும் நிர்வாகிகள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றைக் கொடுத்திருந்தனர்.

அந்த மனுவில், "தமிழகத்தில் கடந்த ஜூலை 1 ஆம் தேதி முதல் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்ற சட்டத்தை தமிழக அரசு நடைமுறைபடுத்தியுள்ளது.
நேற்று கோவையில் மாவட்ட பா.ஜ.க அலுவலகத்தில் இருந்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் பா.ஜ.க தொண்டர்கள் இருசக்கர வாகன பிரசாரத்தை நடத்தியுள்ளனர். அப்போது ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டியுள்ளனர். இது மோட்டார் வாகன சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.
எனவே பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளனர். முன்னதாக மனு கொடுக்க வந்த நிர்வாகிகள் ஹெல்மெட் அணிந்து வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோவை சிறுமி விவகாரம்! வாழறதுக்கே தகுதி இல்லாதவர்கள்! எம்.எஸ்.பாஸ்கர் கொந்தளிப்பு -
மகன் அறநிலைய அமைச்சர்.. ஆனாலும் சமையல் வேலை செய்யும் தாய் - பூசாரி பணியில் தந்தை.. ரமேஷின் பின்னணி -
அமைச்சர்கள் அறையில் ‘ரீல்ஸ்’ எடுக்கும் தவெகவினர்.. வேலையை கெடுக்காமல் தடுக்க அறைக்கு 2 போலீசார்! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி












Click it and Unblock the Notifications