வெள்ளத்தில் தத்தளிக்கும் சென்னைவாசிகளுக்கு இப்படி உதவி செய்யலாமே!
சென்னை: வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் சென்னை மக்களுக்கு பொருளாகவோ, பணமாகவோ உதவி செய்ய விரும்புபவர்கள் http://goonj.org/?page_id=23984# என்ற என்ஜிஓ மூலம் உதவலாம்.
வரலாறு காணாத அளவுக்கு பெய்துள்ள மழையால் சென்னை வெள்ளத்தில் மிதக்கிறது. சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகின்றபோதிலும் மக்கள் சக மக்களுக்கு ஓடியோடி உதவி செய்து வருகிறார்கள்.

வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை ராணுவம் மீ்ட்டு வருகின்றது. வீடுகளை இழந்த மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் சென்னையில் சிக்கியுள்ள மக்களுக்கு உதவி செய்ய பலர் விரும்புகிறார்கள். ஆனால் எப்படி உதவி செய்வது என்பது தெரியாமல் பலர் எதுவும் செய்யாமல் அமைதியாக இருந்துவிடுகிறார்கள்.
அவ்வாறு சென்னை மக்களுக்கு போர்வை, உடை, உணவு அல்லது பணம் கொடுத்து உதவ விரும்புவர்கள் http://goonj.org/?page_id=23984# என்ற என்ஜிஓ மூலம் செய்யலாம்.
பெங்களூர்:
பெங்களூரைச் சேர்ந்த குழு ஒன்று அடுத்த 2 நாட்களுக்கு சென்னை மற்றும் பெங்களூர் இடையே பயணிக்க உள்ளது. வெள்ள நிவாரணப் பணியில் ஈடுபடும் அந்த குழு கீழ்கண்ட பொருட்களை மக்களிடம் இருந்து சேகரிக்கிறது,
போர்வைகள், பிஸ்கெட்டுகள், நூடுல்ஸ், பால் பாக்கெட்டுகள், குளுகோஸ், பருப்பு வகைகள் உள்ளிட்ட உணவு வகைகள், சமைக்கப்பட்ட உணவுகள்(புலாவ், சப்பாத்தி உள்ளிட்டவை), சார்ஜ் செய்யப்பட்ட பவர் பேங்குகள், கொசு ஒழிப்பான்கள், சானிடரி நாப்கின்கள், டயப்பர்கள், மருந்து வகைகள், டார்ச் லைட்டுகள், ரெயின்கோட்டுகள், குடைகள்
யாராவது இந்த பொருட்களை அளிக்க விரும்பினால் இவர்களில் யாரையாவது தொடர்பு கொள்ளலாம்,
இந்திராநகர் - 8147558586 (ராம்)
மடிவாளா - 8050774325 (சிவா)
பனஷங்கரி - 9686201131 (ஸ்வாதி)
ஒயிட்பீல்டு - 7760423660 (நிஷாவிதா)
சாந்தி நகர் - 9886359662 (பெஞ்சமின்)
மாரதஹள்ளி -9940350912 (ஆஸ்தா)
ஃபிரேசர் டவுன்/பானஸ்வாடி/ஹென்னூர்/கம்மனஹள்ளி - 7829382868 (ஐஸ்வர்யா)
*சென்னைவாசிகளுக்கு பணம் அளித்து உதவ விரும்புபவர்கள் பூமிகா அறக்கட்டளையை அணுகலாம். மேலும் தகவல்களுக்கு, இங்கே கிளிக் செய்யவும்-
அந்த அறக்கட்டளை தினமும் 10 ஆயிரம் பேருக்கு உணவு பொட்டலங்களை வழங்க தீர்மானித்துள்ளது. அதற்கு பணம் தேவைப்படுகிறது.
* வேர்ல்டு விஷன் இந்தியாவும் நன்கொடைகளை ஏற்றுக் கொள்கிறது. மேலும் விபரம் அறிய https://www.worldvision.in/chennaifloods என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications