மதுரை அருகே பேருந்து-லாரி மோதிய விபத்து: தகவல் அறிய உதவி எண்கள் அறிவிப்பு
மதுரை: மதுரை மாவட்டம் கல்லுப்பட்டி அருகே அரசுப் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 14 பேர் உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிய உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மதுரை மாவட்டம் டி. கல்லுப்பட்டி அருகே அரசுப் பேருந்துடன் சிமெண்ட் எற்றி வந்த லாரி மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 14 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் திருமங்கலம், T.கல்லுப்பட்டி மற்றும் மதுரை ராஜாஜி மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து நடந்த இடத்தில் தீயணைப்புத்துறையினரும் அருகில் உள்ள பொதுமக்களும் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். மதுரை ஆட்சியர் வீரராகவராவ், எஸ்பி விஜேந்திர பிதாரி சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினர். சுமார் 4 மணிநேரம் மூன்று பொக்லைன் இயந்திரங்களுடன் நடந்த மீட்பு பணிகள் தற்போது நிறைவடைந்தன.
உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை செய்ய மதுரை மருத்துவமனையில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.
மேலும் விபத்து குறித்து தகவல் அறிய உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி திருமங்கம் தாசில்தார் 94450-00591,94450-00592, மதுரையில் சிகிச்சை பெறுவோர் குறித்த அறிய -94450-00586 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications