Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசியல் விட்டுட்டு கொஞ்சம் இதைப்படிங்க... ஒரு உயிரைக்காக்க உதவுங்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: "எனக்கு 5 வயசா இருக்கும்போதிருந்தே அம்மாக்கு ஹார்ட் ப்ராப்ளம் இருக்கு சார்.. அப்பப்போ சேருற பணத்தை வைத்து வைத்தியம் பண்ணிக் காப்பாத்திகிட்டு இருந்தோம். இப்போ எனக்கு 28 வயசாகுது; இனி ஆபரேஷன் பண்ணினால்தான் அம்மாவக் காப்பத்தமுடியும்ன்னு டாக்டர் சொல்லிட்டார்... சார், ஹெல்ப் பண்ணுங்க சார்; எங்கம்மாவக் காப்பாத்த உதவுங்க சார்" என்று கதறுகிறார் அமீர்.

இன்னும் 15 நாட்களுக்குள் ஆபரேஷன் செய்யவில்லை என்றால் அமீரின் அம்மா இறந்துவிடுவாராம்..

Help this mother

யார் அமீர்? ஆதரவற்ற கோடிக்கோடிப் பேரில் இவரும் ஒருவர். சென்னையில் கால் டாக்சி ஓட்டிக்கொண்டு இருக்கிறார். அதில் வரும் சொற்ப வருமானத்தில் ஒரு புறம் அம்மா, அப்பா, தங்கை என மொத்தக் குடும்பத்தின் செலவுகளைப் பார்த்துக்கொண்டே, இன்னொரு புறம் அம்மாவுடைய ஆபரேஷனுக்காக பணத்தை சிறுகச் சிறுகச் சேர்த்துள்ளார், எப்படியும் அம்மாவை காப்பாற்றிவிடலாம் என்றெண்ணி!

எல்லாம் சரியாகப் போய்க்கொண்டு இருந்த சமயத்தில், அமீரின் தந்தை திடீரென நோய்வாய்ப்பட்டுப் படுக்கையில் விழ, அம்மா ஆபரேஷனுக்காகச் சேர்த்து வைத்திருந்த மொத்தப் பணத்தைச் செலவழித்தும் பலனில்லாமல் சென்ற மாதம் இறந்து போனார்.

மொத்தக் குடும்பமும் நொறுங்கிப்போக, அமீரின் அம்மா உடல்நிலை மேலும் மோசமாகிவிட்டது. அங்கு இங்கென அலைந்து, தற்போது சென்னை போரூர் ராமச்சந்திராவில் அந்த அம்மாவை அனுமதித்திருக்கிறார்கள். 24 மணி நேரமும் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்கிற நிலை.

உதவ யாருமே இல்லாத ஏழைக் குடும்பம். அமீர் ஒற்றை ஆளாக தாயைக் காக்கவேண்டும் எனப் போராடிக்கொண்டிருக்கிறார். இப்போதுள்ள நிலையில் அமீருக்குத் தேவை அன்பு உள்ளங்களின் உதவி மட்டும்தான்.. கிட்டத்தட்ட 4 லட்ச ரூபாய் வேண்டுமாம்.

கண் முன் உதவி வேண்டி ஊசலாடிக்கொண்டிருக்கும் உயிரைக் காக்க உதவுங்கள்.

உதவி வேண்டுபவர் பெயர் : ஜூனைத்தா பேகம், வயது : 47, சொந்த ஊர்: சிதம்பரம்.

அவருடைய வங்கி விவரம் :

Bank: Indian Overseas Bank
A/c Name: Zunaitha Begam S
A/c Number: 135301000007933
IFSC: IOBA0001353
Branch: B. Mutlur, Chidambaram Tk

நேரில் பார்த்து உதவ விரும்புபவர்கள், அவர் மகன் அமீரைத் தொடர்புகொண்டு மேற்கொண்டு மேலதிக விவரங்களைக் கேட்டுக்கொள்ளலாம்.
அமீர் : +91 81220 06002, +91 96001 00167

பணம் அனுப்புபவர்கள் அனுப்பின பணத்தின் விவரத்தை ரெபரன்ஸ் நம்பருடன் கமெண்டில் சொல்லவும். பணம் எவ்வளவு வருகிறது என்று கணக்கு வைத்துக்கொள்ள உதவும்.

நன்றிகள் பல...

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+