தீபாவளி ஃபண்டுன்னா பட்டாசு, அண்டா, குண்டாதானா?... நாங்களும் வித்தியாசமா தருவோம்ல!
தீபாவளி பண்டிகைக்கென்று அதுவும் ஆண்கள் மட்டுமே உறுப்பினர்களாக சேர்த்து கொள்ளக் கூடிய சிட் ஃபன்டும் அதில் வழங்கக் கூடிய பொருள்கள் குறித்தும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
சென்னை: ஆண்களுக்கான தீபாவளி சீட்டில் வழங்கக் கூடிய பொருள்கள் குறித்த பட்டியல் ஒன்று வைரலாகி வருகிறது. அதில் சரக்கு பாட்டில்களும், சோடா, சைடு டிஷ் ஆகியன இடம்பெற்றுள்ளன.
பெண்கள் தங்கள் அக்கபக்கம் வீடுகளைச் சேர்ந்தோருடன் தீபாவளி பண்டிகைக்கென்று சீட் பிடிப்பர். ஒரு வருட சீட்டு அவரவர் வசதிகேற்ப மாதந்தோறும் செலுத்தி வருவர்.

தீபாவளி பண்டிகை நெருங்கும் சமயத்தில் கட்டிய பணத்துக்கு ஒரு பட்டாசு பாக்ஸ், ஸ்வீட், காரம், எவர் சில்வர் சாமான், விலை மலிவான சேலை என வழங்குவர். இன்னும் சிலரோ பட்டாசுடன் மளிகை பொருள்களை வழங்குவர். இது பெரும்பாலும் பெண்கள் ஆண்களுக்கு தெரியாமல் சேமித்து வைக்கும் சிறுசேமிப்பாகவே இருக்கும்.
தீபாவளிக்கு மொத்தமாக செலவு செய்வதுடன் சிறுக சிறுக சேர்த்து பட்டாசு வாங்குவது ஏழை மக்களுக்கும் பெரிதும் கைகொடுக்கும். ஆனால் சென்னை மந்தைவெளியில் ஆண்களும் தீபாவளி பண்டிகைக்கு சிரமப்படாமல் இருக்க சீட்டு பிடிக்கப்படுகிறது.
அதில் 12 மாதங்களுக்கு ரூ150 செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தி வந்தால் தீபாவளி பண்டிகைக்கு பிராந்தி பாட்டில், பீர் பாட்டில், வாட்டர் பாட்டில், சோடா, சிப்ஸ் பாக்கெட், சிக்கன் 65 1 கிலோ, பெப்சி அல்லது கோக், ஸ்வீட் பாக்ஸ் உள்ளிட்டவை வழங்கப்படும் என்று ஒரு விளம்பரம் போடப்பட்டுள்ளது. இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
தீபாவளியன்று பட்டாசு, அண்டா குண்டா மட்டும்தான் தேவைப்படுமா என்ன. ஆண்களுக்கும் சில செலவுகள் இருக்குல்ல!
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications