For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தை உலுக்கிய கோரக் கொலைகள்.. ஈரக் குலையை நடுங்க செய்த ராமஜெயம் டூ சிவமூர்த்தி

தமிழகத்தை உலுக்கிய கோரக் கொலைகளால் மக்களின் ஈரக் குலை நடுங்கியது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழகத்தை உலுக்கிய ராமஜெயம் முதல் சிவமூர்த்தி கொலை வரை- வீடியோ

    சென்னை: தமிழகத்தில் கே. என். நேருவின் தம்பி ராமஜெயம் கொலை முதல் ப. சிதம்பரத்தின் உறவினர் சிவமூர்த்தி கொலை வரை குலை நடுங்க செய்தவையாகும்.

    தமிழகத்தில் ராமஜெயம், வழக்கறிஞர் சங்கரசுப்புவின் மகன், சுவாதி, சிவமூர்த்தி என கொடூரமாக நடந்த கொலைகள் ஏராளம். இவை எப்படி நடந்தது என்று கேட்டால் அதை கொலையாளி விவரிப்பதை கேட்கும் போதே கேட்பவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது.

    என்னதான் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக இருக்கிறது என்று சொல்லப்பட்டதாலும் எப்படியும் போலீஸின் கண்களில் மண்ணை தூவிவிட்டு இப்படிப்பட்ட கொலைகள் நடக்கத்தான் செய்கிறது.

    வழக்கறிஞர் மகன்

    வழக்கறிஞர் மகன்

    சென்னை அண்ணாநகரை சேர்ந்தவர் வக்கீல் சங்கரசுப்பு. இவரது மகன் சதீஷ்குமார் கடந்த 2011-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். அவரது உடல் ஐ.சி.எப். ரயில்வே காலனியில் உள்ள குளத்தில் மீட்கப்பட்டது.

    பயங்கரம்

    பயங்கரம்

    திருச்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் தம்பி ராமஜெயம் என்பவர், கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி காலை நடைபயிற்சிக்குச் சென்றபோது காணாமல் போனார். பிறகு அன்றே அவரது உடல் திருச்சி கல்லணை சாலையில் கை-கால்கள் கட்டப்பட்ட நிலையில் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது. கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தார் ராமஜெயம். இவரது கொலை வழக்கு தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    பெண் என்றும் பாராமல்

    பெண் என்றும் பாராமல்

    சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் 24-ஆம் தேதி காலையில் தந்தை சந்தான கோபாலகிருஷ்ணன் சுவாதியை பைக்கில் கொண்டு வந்து இறக்கி விட்டு சென்றார். நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் காலை 6.30 மணிக்கு சுவாதியின் பின்னால் நின்றிருந்த இளைஞர் அரிவாளால் வாயில் வெட்டி கொலை செய்தார். பின்னர் ராம்குமார் இதுதொடர்பாக கைது செய்யப்பட்டார். அவரும் பின்னர் சிறையில் வயரைக் கடித்து இறந்ததாக தெரிவிக்கப்பட்டு கேஸ் குளோஸ் ஆனது!

    கல் கட்டி கொலை

    கல் கட்டி கொலை

    திருப்பூரில் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வந்தவர் சிவமூர்த்தி. இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கடத்தப்பட்டார். இவர் ப.சிதம்பரத்தின் உறவினராவார். இவரது உடல் ஓசூரில் மீட்கப்பட்டது. அவரது உடலில் மைல்கல்லைக் கட்டி கெலவரப்பள்ளி அணையில் வீசப்பட்டது. கல் சிறியதாக இருந்ததால் சடலம் மிதந்தது. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். பணம் கேட்டு கொடுக்காததால் அவரை கொலை செய்துவிட்டதாக கூறப்படுகிறது. இதுபோன்ற திகில் கொலைகள் எப்போதுதான் குறையுமோ.

    English summary
    Here are the list of important murders which gives tragedy and fear those who hears the killing story.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X