எம்ஜிஆரும் இல்லை, ஜெ.வும் இல்லை, எம்ஜிஆர் உருவாக்கிய பதவியும் இப்ப போயே போச்சு!
எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட பொதுச் செயலாளர் என்ற பதவியை அதிமுகவின் தீர்மானம் அடியோடு ஒழித்துவிட்டது.
Recommended Video

சென்னை: அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவியே இனி கிடையாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட அப்பதவி அடியோடு ஒழிக்கப்பட்டது.
பரபரப்பான அரசியல் சூழலில் இன்று பொதுக் குழு கூட்டம் கூடியது. இதில் சசிகலா, தினகரன் நீக்கம் உள்பட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகின.
டிடிவி தினகரன் சார்பில் இந்த பொதுக் குழுக் கூட்டத்துக்கு தடை விதிக்க கோரியும்
சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்நிலையில் திட்டமிட்டபடி பொதுக் குழு கூட்டம் வானகரத்தில் திருமண மண்டபத்தில் கூடியது.

முதல்வர், துணை முதல்வர்
இதைத் தொடர்ந்து கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து ஜெயலலிதாவுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

சசிகலாவின் நியமனம் ரத்து
பொதுச் செயலாளராக சசிகலாவின் நியமனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அதிமுகவில் இனி பொதுச் செயலாளர் என்ற பதவியே கிடையாது என்றும் நிறைவேற்றியுள்ளனர்.

அதிகாரம் உள்ளது
கட்சியில் ஒருவரை சேர்க்கவோ நீக்கவோ ஒருங்கிணைப்பாளரான ஈபிஎஸ்ஸுக்கும் இணை ஒருங்கிணைப்பாளரான ஓபிஎஸ்ஸுக்கும் மட்டுமே உள்ளது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த பதவிகள் பொதுச் செயலாளர் பதவிக்கு இணையானது என கூறப்படுகிறது.

எம்ஜிஆர் உருவாக்கியது
திமுகவின் தலைவராக அண்ணாதுரை இருந்தபோது, அதிலிருந்து பிரிந்து 1972-இல் அதிமுக என்ற புதிய கட்சியை எம்ஜிஆர் தொடங்கினார். அப்போது தலைவர் என்றால் அது அண்ணாவை மட்டுமே ஏற்றுக் கொள்வோம் என்று கூறிய எம்ஜிஆர், அதிமுகவில் தலைவர் பதவியே கிடையாது என்றார். அப்போது பொதுச் செயலாளர் என்ற புதிய பதவியை உருவாக்கி அதில் அமர்ந்தார் எம்ஜிஆர்.

அந்த பதவியும் இல்லை
அதிமுகவில் தலைவர் பதவியில்லாதது போல் பொதுச் செயலாளர் பதவியும் இனி இல்லை என்று அதிமுக பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications