கேரளாவிற்கு உண்டியல் பணத்தை கொடுத்த சிறுமிக்கு சைக்கிளை பரிசாக கொடுத்தது ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம்!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கேரளாவுக்கு உதவிய சிறுமிக்கு சைக்கிள் வழங்க முன்வந்தது ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம்!- வீடியோ

    சென்னை: கேரளத்துக்கு நிவாரண நிதியாக சேமிப்பு பணத்தை அளித்த விழுப்புரம் சிறுமி அனுப்பிரியாவுக்கு புதிய சைக்கிளை ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம் இலவசமாக அளித்தது.

    கேரளத்தில் வரலாறு காணாத மழை பெய்ததால் ஆங்காங்கே தண்ணீர் சூழ்ந்தது. இதனால் கடவுளின் தாய்வீடான அந்த மாநிலமே தற்போது நிலைகுலைந்து காணப்படுகிறது.

    இந்த மாநிலத்து சகோதர, சகோதரிகளுக்கு தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து நிதியுதவியும் நிவாரண பொருட்களும் சென்று வருகின்றனர்.

    சேமித்த பணம்

    சேமித்த பணம்

    இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் கே கே ரோடு சிவராம் பகுதியை சேர்ந்தவர் சிவசண்முகநாதன். இவரது மனைவி லலிதா. இவர்களுக்கு அனுப்பிரியா என்ற 8 வயது மகள் உள்ளார். இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 2-ஆம் வகுப்பு வருகிறார். இவர் தான் சேமித்து வைத்த ரூ.9000 பணத்தை கேரளா வெள்ள நிவாரண நிதிக்கு அளித்துள்ளார்.

    நிறுவனம்

    நிறுவனம்

    4 ஆண்டுகளாக சிறுக சிறுக சேர்த்த பணத்தை அதுவும் ஆசையாய் சைக்கிள் வாங்க வைத்திருந்த பணத்தை சிறுமி நிவாரணத்துக்காக வழங்கியது அனைவராலும் பாராட்டப்படுகிறது. இந்நிலையில் அவருக்கு புதிய பிராண்டட் சைக்கிளை அளிக்க ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம் முன்வந்துள்ளது.

    ஹீரோ சைக்கிள்ஸ்

    ஹீரோ சைக்கிள்ஸ்

    இதுகுறித்து அந்த நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் உற்ற நேரத்தில் உதவும் உங்கள் மனிதாபிமானத்தை நாங்கள் பாராட்டுகிறோம் அனுப்பிரியா. உங்களுக்கு எங்களிடம் இருந்து புதிய பிராண்டட் சைக்கிள் ஒன்று பரிசாக காத்திருக்கிறது. உங்கள் முகவரியை [email protected] என்ற இமெயில் முகவரிக்கு அனுப்புங்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.

    உதவ முன்வந்த நெட்டிசன்கள்

    அனுப்பிரியாவின் முகவரியை எனக்கு தெரியப்படுத்துங்கள். அவருக்கு நான் சைக்கிள் வாங்கி தருகிறேன் என்று பட் ஜஹூர் என்பவர் டுவீட்டியுள்ளார். இவர் போல் இன்னும் சிலர் அந்த சிறுமிக்கு பரிசளிக்க முன்வந்தனர்.

    ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம்

    இந்நிலையில் அட்சயாவின் பெற்றோரை ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவன அதிகாரிகள் தொடர்பு கொண்டு சைக்கிளை இலவசமாக அளிக்க முன்வந்துள்ளதை தெரிவித்தனர். இதையடுத்து அவர்களை தங்கள் ஷோரூமுக்கு வரவழைத்து சிறுமிக்கு பிடித்த சைக்கிளை பரிசாக வழங்கினர். இதனால் சிறுமி முகத்தில் மகிழ்ச்சி பெருகியது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+