கடைகளின் உடைமாற்றும் அறைகளில் மறைத்து வைக்கப்படும் கேமரா: உஷார் பெண்களே, உஷார்
சென்னை: கடைகளில் உள்ள உடை மாற்றும் அறைகளை பயன்படுத்தும் பெண்களே உஷாராக இருங்கள்.
அந்த காலத்தில் நம் ஊரில் உள்ள டெய்லர் கடை அண்ணாச்சி தைத்துக் கொடுக்கும் துணியை அணிந்து மகிழ்ந்தோம். அவர் தனக்கு தெரிந்த அளவு தைத்துக் கொடுத்த உடைகளையே ஏதோ ஃபேஷன் டிசைனர்கள் வடிவமைத்த ஆடையை அணிவது போன்று பெருமையாக அணிந்து அதை ஊருக்கே காட்டி வந்தோம்.
நாகரீகம் வளர்ந்தது, டெய்லர் கடை அண்ணாச்சியை நாம் எல்லாம் கிட்டத்தட்ட மறுந்துவிட்டோம்.

ஷாப்பிங் மால்கள்
ஷாப்பிங் மால்களில் உள்ள பெரிய பெரிய துணிக் கடைகளில் ஆடை வாங்குவதையே நாம் விரும்புகிறோம். அவ்வாறு உடை வாங்கும்போது அந்த கடைகளில் உள்ள உடை மாற்றும் அறையில் ஆடையை போட்டுப் பார்க்கிறோம்.

கேமரா
துணிக் கடைகளில் உள்ள அதிலும் பெண்கள் உடை மாற்றும் அறைகளில் கேமராக்களை மறைத்து வைக்கிறார்கள். இல்லையெனில் செல்போனை மறைத்துவைத்து பெண்கள் உடை மாற்றுவதை படம் எடுக்கிறார்கள்.

உஷார்
துணிக் கடைகளில் உடை மாற்றும் அறைக்கு சென்றால் உடனே ஆடையை அவிழ்த்துவிட வேண்டாம். அந்த அறையில் கேமரா ஏதாவது உள்ளதாக என்று பார்க்கவும். அதன் பிறகு ஆடையை மாற்றுங்கள்.

விற்பனை
உடை மாற்றும் அறைகளில் மறைத்து வைக்கப்படும் கேமராவில் பதிவாகும் பெண்கள் உடைமாற்றும் காட்சிகள் இணையதளங்களுக்கு விற்கப்படுகிறது. தற்போது கேமராக்கள் கடுகு அளவில் கூட வந்துவிட்ட நிலையில் அவற்றை கண்டுபிடிப்பதும் கடினமாகிவிட்டது.

வேண்டாமே
ஆடைகளை வாங்கினால் கடையிலேயே போட்டுப் பார்க்காமல் வீட்டுக்கு சென்று அணிந்து பாருங்கள். அளவு சரியாக இல்லை என்றால் மீண்டும் அதே கடையில் கொடுத்து மாற்றுங்கள் அல்லது அருகில் உள்ள டெய்லர் கடையில் அளவை மாற்றிக் கொள்ளுங்கள் பெண்களே.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications