Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கபாலிக்கு அதிக கட்டணம்... தமிழக அரசுக்கு எதிரான கோர்ட் அவமதிப்பு வழக்கு தள்ளுபடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக தியேட்டர்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக தமிழக அரசுக்கு எதிராக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செம்பியத்தைச் சேர்ந்த தேவராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார்.

High court dismisses against TN govt

அதில், 'தமிழகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக தொகையை படம் பார்க்க வரும் ரசிகர்களிடம் இருந்து வசூலிக்கப்படுகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிடவேண்டும் என்று பொதுநல வழக்கு தொடர்ந்தேன்.

இந்த வழக்கை விசாரித்த இந்த உயர்நீதிமன்றம் கட்டணத்தை அதிகம் வசூலிக்கும் தியேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது. ஆனால், தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அண்மையில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த கபாலி படம் வெளியானது.

இந்த படத்தை பார்க்க வந்த ரசிகர்களிடம் பெரும் தொகை கட்டணமாக வசூலிக்கப்பட்டது. எனவே, ஹைகோர்ட் உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்காத தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும்' என வலியுறுத்தியிருந்தார்.

இந்த மனு இன்று தலைமை நீதிபதி சஞ்சய்கி‌ஷன் கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தேவராஜன் நேரில் ஆஜராகி வாதிட்டார்.

அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் இது தொடர்பான பதில் வாதத்தில், 'தமிழக அரசு அதிக கட்டணம் தியேட்டர்களில் வசூலிக்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க ஒரு கண்காணிப்பு குழுவை அமைத்துள்ளது. மேலும் தியேட்டர்கள் நிர்வாகம் அதிக கட்டணம் வசூலித்தால், அதுகுறித்து புகார் செய்த இலவச தொலைப்பேசி எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தியேட்டர்களாக திடீரென சென்று சோதனை நடத்த அதிகாரிகளை கொண்ட பறக்கும் படையும் அமைக்கப்பட்டுள்ளது' எனத் தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள், 'ஹைகோர்ட்டின் உத்தரவின்படி தமிழக அரசு நடவடிக்கைகள் எடுத்துள்ளதால், இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தள்ளுபடி செய்கிறோம்' என உத்தரவிட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+