மேகி நூடுல்ஸ் விவகாரம்: அமிதாப், மாதுரி தீட்சித், ப்ரீத்தி ஜிந்தாவுக்கு மதுரை கோர்ட் நோட்டீஸ்
மதுரை: மேகி நூடுல்சிற்கு தடை விதிக்கக் கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த மதுரை நுகர்வோர் ஆணையம், அதன் விளம்பரத்தில் நடித்த பாலிவுட் நடிகர்கள் அமிதாப், மாதிரி தீட்ஷித், ப்ரீத்தி ஜிந்தாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மேகி நூடுல்ஸில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக ரசாயனங்கள் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. எனவே, இந்தியாவின் பல மாநிலங்களில் மேகி நூடுல்ஸிற்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. மேலும் பல மாநிலங்களிலும் மேகியின் தரம் குறித்த ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

மேகி நூடுல்ஸ் விளம்பரத்தில் நடித்த பாலிவுட் நடிகர்களான அமிதாப், மாதுரி தீட்ஷித் மற்றும் ப்ரீத்தி ஜிந்தா ஆகியோருக்கும் இந்த விவகாரத்தால் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, இது தொடர்பாக பீகாரில் தொடரப்பட்ட வழக்கில் இவர்கள் மூவரையும் கைது செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில், மேகி நூடுல்ஸிற்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை மதுரை நுகர்வோர் ஆணையம் இன்று விசாரித்தது. விசாரணையின் முடிவில் மேகி நூடுல்ஸ் விளம்பர படத்தில் நடித்த பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், மாதுரி தீட்ஷித், ப்ரீத்தி ஜிந்தா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
மேலும் இது தொடர்பாக வரும் ஜூலை 6ம் தேதிக்குள் விளக்கம் அளிக்கவும் வலியுறுத்தப் பட்டுள்ளது. நெஸ்லே அதிகாரிகள் ஜூன் 18 ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications