தமிழக பெண்கள் சிறைகளை மாவட்ட நீதிபதிகள் ஆய்வு செய்த அறிக்கை தேவை- ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: தமிழகத்தில் உள்ள பெண்கள் சிறைகளை மாவட்ட நீதிபதிகள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள சிறைகளில் அடிப்படை வசதிகள் இல்லை என்று அகில இந்திய சிறை தீர்த்திருத்தக் குழு அறிக்கை வெளியிட்டது. இதன் அடிப்படையில் சென்னை ஹைகோர்ட் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு பல ஆண்டுகளாக ஹைகோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கு விசாரணையின்போது தமிழகத்தில் உள்ள பெண்கள் சிறைகளை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழ்நாடு சட்டப்பணி ஆணைக்குழுவுக்கு ஹைகோர்ட் உத்தரவிட்டது.

இதன்படி சட்டப்பணி ஆணைக்குழுவை சேர்ந்த நீதிபதிகள் சிறைகளை ஆய்வு செய்து சில பரிந்துரைகளுடன் அறிக்கையை தாக்கல் செய்தார்கள். இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள பல பரிந்துரைகளை தமிழக அரசு அமல்படுத்திவிட்டது. எனினும் சில பரிந்துரைகளை அமல்படுத்தாமல் உள்ளது.
இந்த நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "தமிழ்நாடு சட்டப்பணி ஆணைக்குழு உறுப்பினர் செயலாளர், நீதிபதி டீக்காராமன், அரசு துறை செயலாளர்களை அழைத்து, ஆலோசனைக் கூட்டம் நடத்தி, ஏற்கனவே செய்யப்பட்ட பரிந்துரைகளை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகம் முழுவதும் உள்ள பெண்கள் சிறைகளை அந்தந்த மாவட்ட முதன்மை நீதிபதிகள், தலைமை மாஜிஸ்திரேட்டுகள் ஆகியோர் அவ்வப்போது ஆய்வு செய்து மாதந்தோறும் அறிக்கையை ஹைகோர்ட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணையை வருகிற ஜனவரி 25 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்" என்று கூறியுள்ளனர்.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications