கருணாநிதி 92: ஃபேஸ்புக், ட்விட்டரில் வாழ்த்தலாம்…
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் 92வது பிறந்தநாளை ஹைடெக் ஆக கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. வயசானாலும் அறிக்கை, பேட்டி என 29 வயது இளைஞரைப்போல உற்சாகமாக செயல்பட்டு வருகிறார் கருணாநிதி.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 3 ஆம் தேதி அவரது பிறந்தநாளை திமுகவினர் திருவிழா போல கொண்டாடுவார்கள். இந்த ஆண்டு ஹைடெக் ஆக கொண்டாட முடிவு செய்து அதற்காக சமூக வலைத்தளங்களில் ஹேஸ்டேக்குகளை உருவாக்கியுள்ளனர்.
திமுகவினர்தான் என்றில்லை யார் வேண்டும் என்றாலும் கருணாநிதிக்கு வாழ்த்து கூறலாம் அவரே பதிலளிப்பாராம்.

92 வயது இளைஞர்
92 வது பிறந்தநாள் கொண்டாடும் கருணாநிதியை திமுகவினர் இளைஞராகவே நினைத்து பலரும் இன்று முதல் வாழ்த்து கூற தொடங்கியுள்ளனர்.

அறிவாலயத்தில் கொண்டாட்டம்
இதுவரை ஆண்டுதோறும் பிறந்தநாள் கொண்டாடுவதும் அவரை சென்னை திமுக தலைமையகத்தில் தொண்டர்கள் கூடி நின்று வாழ்த்துவதும், பரிசு மழை பொழிவதும் வழக்கமான ஒன்றாகும்.

இளைஞர்களை கவர
92வது பிறந்தநாள் கொண்டாட இருக்கும் கருணாநிதி, இளைய சமுதாயத்தினரைக் கவரும் வகையில் இன்றைய தொழில்நுட்பத்தை கையில் எடுத்துள்ளார்.

ஹைடெக் அவதாரம்
இந்த ஆண்டு தனது பிறந்த நாளை ஒட்டி ஹை டெக் அவதாரம் எடுத்துள்ளார் கருணாநிதி. அவரை வாழ்த்த விரும்புவோர் எஸ்எம்எஸ்., மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்து தெரிவிக்க சிறப்பு தொழில் நுட்ப வசதி செய்து தரப்பட்டுள்ளது.

எஸ்.எம்.எஸ் வார்த்து
கருணாநிதிக்கு எஸ்எம்எஸ் மூலம் வாழ்த்துச் சொல்ல விரும்புவோர் 54242 என்ற எண்ணுக்கு வாழ்த்து எஸ்எம்எஸ் அனுப்பலாம்.

சமூக வலைத்தளங்கள்
இதேபோல் பேஸ் புக், டுவிட்டர் மற்றும் கூகுள் பிளஸ் போன்ற சமூக வதைளங்கள் மூலம் கருணாநிதிக்கு வாழ்த்து கூற விரும்புவோர் "#Kalaignar92" and '#HBDMK." என்ற ஹேஸ்டேக்குகளில் வாழ்த்துக்களைப் பதிவு செய்யலாம்.மேலும் தமிழிலிலும் இத்தகைய ஹேஸ்டேக்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

கருணாநிதி நேரடி பதில்
கருணாநிதியின் இணையதளத்திலும் வாழ்த்துக்களை பதிவு செய்யலாம். இந்த தகவல்களை வெளியிட்டுள்ள திமுக தலைமையகம், பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் பதிவு செய்யப்படும் இந்த வாழ்த்துகளுக்கு, கருணாநிதியே பதில் அளிப்பார் என்றும் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடியைப் போல கருணாநிதியும் இனி ஹைடெக் ஆக இளைஞர்களுடன் உரையாட முடிவு செய்துவிட்டார். அதற்கான முன்னோட்டம்தான் இந்த சமூக வலைத்தள பிறந்தநாள் வாழ்த்து என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications