கொளுத்தி எடுக்குதே வெய்யிலு.... தீயாய் எரியும் திருத்தணி.. 110.5 டிகிரி பாரன்ஹீட்
திருத்தணியில் 110.5 டிகிரி பாரன்ஹீட் வெயில் அடித்து பொதுமக்களை தாளித்து எடுத்துள்ளது.
திருத்தணி: தமிழகமெங்கும் பல பகுதிகளில் வெளியே தலை காட்ட முடியாத அளவிற்கு அனல் காற்று வீசுகிறது.
திருத்தணியில் இன்று மாநிலத்திலேயே அதிகபட்சமாக 110.5 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
2017 கோடையில் வழக்கத்தைக் காட்டிலும் வெப்ப நிலை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வானிலை எச்சரிக்கையை விட வெப்பத்தின் தாக்கம் தமிழகத்தில் அதிகமாகவே உள்ளது.

அக்னி நட்சத்திரம்
அக்னி நட்சத்திர காலம் தொடங்க இன்னும் இரண்டு வாரம் உள்ளது. அதற்கு முன்பாகவே அனல் காற்று வீசி வருகிறது. கடந்த சில தினங்களாக தமிழகத்தில் வெயில் கொளுத்தி வருகிறது.

விழிப்புணர்வு பிரச்சாரம்
வெயிலில் இருந்து மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள ஆங்காங்கே விழிப்புணர்வு பிரச்சாரம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் எங்கும் வெயில் வாட்டிவதைக்கிறது.

திருத்தணி
இந்நிலையில், இன்று திருத்தணியில் 110.5 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது. இதனால் அந்தப் பகுதி மக்கள் வெளியில் தலை காட்ட முடியாமல் அவதிப்பட்டனர்.

வேலூர்
இதே போன்று மாநிலத்தின் பல இடங்களில் வெப்பம் வாட்டி வருகிறது. வேலூர் மாவட்டத்தில் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தி எடுத்துள்ளது.

கூல் மழை
இதனிடையே கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது. இதேபோல் கொடைக்கானல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதனால் அந்தப் பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications