சென்னையில் 30 நாட்களில் 118 செ.மீ மழை பதிவு: 97 ஆண்டு சாதனை முறியடிப்பு
சென்னை: சென்னையில் வடகிழக்கு பருவமழையின் தீவிரத்தால் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளம் சூழ்ந்துள்ளது. கடந்த 107 ஆண்டுகால சாதனையை நவம்பர் மாதம் பெய்த மழை முறியடித்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 118 செ.மீ மழை அளவு பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் நேற்று முன்தினம் இரவில் இருந்து சென்னையில் மீண்டும் அடை மழை பெய்யத் தொடங்கியுள்ளது. நேற்று மாலையில் இருந்து விடிய விடிய மழை பெய்தது.இன்னும் 3 நாட்களுக்கு சென்னையில் மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
|
நவம்பர் மாத மழை
கடந்த நவம்பர் 1ம்தேதி முதல் 30ம்தேதி நள்ளிரவு 12 மணி வரை சென்னையில் அதிகபட்சமாக 118 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. இதற்கு முன்பு கடந்த 1918ஆம் ஆண்டு சென்னையில் நவம்பர் மாதத்தில் 108.8 செ.மீ மழை பெய்து இருந்தது.
|
97 ஆண்டு சாதனை
இதன் காரணமாக தற்போது 97 ஆண்டு கால சாதனை முறியடிக்கப்படுகிறது. கடந்த மாதத்தில் மட்டும் மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக 118 செ.மீ மழையும், நுங்கம்பாக்கத்தில் 105 செ. மீ மழையும் பதிவாகியுள்ளது.
|
1985ம் ஆண்டு மழை
இந்த மழைக்கு முன், 1985ம் ஆண்டு சென்னையில் அதிகபட்சமாக 97 செ.மீட்டர் மழை பெய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னும் 4 நாட்களுக்கு மழை இருப்பதால் பல்வேறு சாதனைகளை படைக்க உள்ளது இந்த வடகிழக்குப் பருவமழை.
|
பெய்யென பெய்யும் மழை
தமிழகம், புதுச்சேரியில் கடந்த 8 ஆண்டுகளாக இயல்புக்கு எஞ்சிய அளவிலேயே மழை பதிவானது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக இயல்புக்கு குறைவாகவே மழை பெய்தது.2012ம் ஆண்டில் 13 சதவீதமும் 2013ம் ஆண்டில் 33 சதவீதமும் இயல்புக்கு குறைவாகவே மழை பதிவானது.
|
கூடுதல் மழை அளவு
வடகிழக்கு பருவ மழையான இந்த கால கட்டத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 19 மாவட்டங்களில் வழக்கத்தை விட அதிக அளவு மழை பெய்துள்ளது.இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தாமதமாக அக்டோபர் மாதம் 28ம் தேதி தான் தொடங்கியது. நவம்பர் 9ம் தேதிதான் தீவிரமடைந்தது. தொடர்ந்து கனமழை பெய்ததால் தமிழ்நாட்டில் உள்ள ஏரி, குளங்கள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. இன்னும் 4 நாட்களளுக்கு மழை உள்ளது தமிழகம் தாங்குமோ தெரியலையே.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications