காவிரி விவகாரத்தில் கருத்து கூறாத ரஜினிக்கு உப்பு பாக்கெட் பார்சல்.. இந்து மக்கள் கட்சி முடிவு!
சென்னை: காவிரி நதிநீர் விவகாரத்தில் நடைபெறும் போராட்டங்களைப் பார்த்து தமிழக நடிகர்கள் பலரும் கருத்து கூறி வருகின்றனர். கமல்ஹாசனும் தன்னுடைய கருத்தை டுவிட்டரில் பதிவு செய்து விட்டார். ஆனால் காவிரி விவகாரத்தில் இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்காத நடிகர் ரஜினி காந்த்துக்கு இந்து மக்கள் கட்சி ரயில்வே பார்சல் மூலம் உப்பு அனுப்பி இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தினமும் 12,000 கன அடிவீதம் வரும் 20ஆம் தேதி வரை தண்ணீர் திறக்க வேண்டும் என்று கர்நாடகா மாநிலத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, கர்நாடகாவில் தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
நூற்றுக்கணக்கான வாகனங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன. தமிழக டிரைவர்கள் அடித்து அவமானப்படுத்தப்பட்டன. இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். ஆனால், இந்த விஷயத்தில் இதுவரை நடிகர் ரஜினிகாந்த் தனது கருத்தை எதையும் தெரிவிக்கவில்லை.
ரஜினியின் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசுகள் கொடுத்த தமிழர்களுக்காக ஒரு சிறு ஆறுதல் வார்த்தைகளைக் கூட ரஜினி கூறவில்லை.
இதற்கு கண்டனம் தெரிவித்து அவருக்கு இந்து மக்கள் கட்சியினர் உப்பு பாக்கெட்டுகளை அனுப்பி இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்த உப்பு பாக்கெட்டுகளை ரயில்வே பார்சல் மூலம் அனுப்பி இருப்பதாக அந்தக் கட்சியினர் தெரிவித்து உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications