வைரமுத்துவிற்கு எதிராக சேப்பாக்கத்தை அதிர வைத்த இந்து அமைப்பினர் போராட்டம்!
Recommended Video

சென்னை: ஆண்டாள் பற்றி அவதூறாக பேசிய வைரமுத்துவை கண்டித்து சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நேற்று ஆயிரக்கணக்கான இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஜபாளையத்தில் கடந்த 7ம் தேதி நடந்த நிகழ்ச்சியில் 'தமிழை ஆண்டாள்' என்ற தலைப்பில் கவிஞர் வைரமுத்து பேசியபோது, அவர் ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சில கருத்துகளை கூறியதாக புகார் எழுந்தது.
எதிர்ப்பு அதிகரித்த நிலையில், வைரமுத்து அதற்கு விளக்கம் கொடுத்தார். புண்படுத்துவது தனது நோக்கமில்லை என்றார். ஆனாலும் வைரமுத்துவிற்கு எதிரான எதிர்ப்பு குறையவில்லை.

காவல் நிலையங்களில் வழக்கு மேல் வழக்கு
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வைரமுத்துவை கண்டித்து, ஆர்ப்பாட்டம், பேரணி, போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ராஜபாளையம் தெற்கு காவல்நிலையத்தில் கவிஞர் வைரமுத்து மீது அவதூறாக பேசுதல், மத துவேஷம் ஏற்படுத்தும் வகையில் பேசுதல் மற்றும் மக்களின் மத நம்பிக்கையை சீர்குலைத்தல் என 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதேபோல சென்னை கொளத்தூர், தாம்பரம்,, சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையங்களிலும் வைரமுத்து மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மதத்தலைவர்கள் பங்கேற்பு
இந்நிலையில் நேற்று சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே வைரமுத்துவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்பினர் ஆர்பாட்டம் நடத்தினர். இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன், ஸ்ரீபெரும்புதுார், ஸ்ரீவில்லிப்புத்துார், மன்னார்குடி, ஆழ்வார் திருநகர் ஜீயர்கள், முத்து சிவாச்சாரியார், வி.எச்.பி., தலைவர் வேதாந்தம், உபன்யாசகர்கள் வேங்கடகிருஷ்ணன், அனந்த பத்மநாபச்சாரியார், ஆர்.வி.பி.எஸ்.மணியன், தாம்பராஸ் தலைவர் நாராயணன், அரவிந்தலோசனன் பங்கேற்றனர்.

திரைப்பிரபலங்கள்
இயக்குனர் விசு, எஸ்.வி.சேகர், குட்டிபத்மினி, உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர். ஆர்ப்பாட்டத்தில் இந்து அமைப்பினர் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

எஸ்.வி.சேகர் விமர்சனம்
எஸ்.வி. சேகர் பேசுகையில், வைரமுத்து என பெயர் வைத்தால் இந்து ஆகிவிட முடியாது. கிறிஸ்தவராகிய அவர், இந்து பெயரை வைத்துக்கொண்டு இந்துக்களை இழிவுபடுத்துகிறார். வைரமுத்து வருத்தம் தெரிவித்தால் போதாது, ஆண்டாள் கோயிலில் விழுந்து வணங்க வேண்டும், மன்னிப்பு கேட்க வேண்டும். வைரமுத்து அளவுக்கு எச்.ராஜா தரம் தாழ்ந்து பேசி இருக்கக்கூடாது. இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்களை போலவே இந்துக்களும், தங்கள் மீது அவதூறு பரப்புவோருக்கு பயத்தை ஏற்படுத்த வேண்டும் என்றார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications