For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதவாத கட்சிதான் என நிரூபிக்கிறது பாஜகவின் தேர்தல் அறிக்கை: மு.க.ஸ்டாலின்

By Mathi
|

சென்னை: பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை அக்கட்சி மதவாத கட்சியே என்பதை நிரூபிக்கும் வகையில் இருக்கிறது என திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. அதில் ராமர் கோயில், பொதுசிவில் சட்டம், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது பிரிவு நீக்கம் என உறுதியளிக்கிறது பாஜக தேர்தல் அறிக்கை.

Hindutva agenda intact in BJP manifesto : MK Stalin

இந்த அறிக்கை குறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், இலங்கைத் தமிழர் பிரச்சனை பற்றியோ தமிழக மீனவர் பிரச்சனை பற்றியோ இந்த அறிக்கையில் இல்லை. மதவாதத்தை வெளிப்படுத்தும் வாக்குறுதிகள் இருக்கின்றன.

ஆர்.எஸ்.எஸ். தலைவர்களின் படத்தைப் போட்டு தேர்தல் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது. அதாவது ஒரு மதவாத கட்சிதான் நாங்கள் என்கிற வகையில்தான் தேர்தல் அறிக்கை இருக்கிறது.

அப்படிப்பட்ட கட்சியோடுதான் இணைந்து மெகா கூட்டணி அமைத்திருப்பதாக சில கட்சிகள் சொல்லிக் கொள்கின்றன. ஆகையால்தான் நாங்கள் இதை சந்தர்ப்பவாத கூட்டணி என்கிறோம் என்றார்.

English summary
DMK treasurer M.K. Stalin has said that the Hindutva agendas remain intact in the BJP manifesto.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X