மெரீனா போராட்டத்தை சிதைக்க சதி.. ஹிப்ஹாப் தமிழா ஆதி பரபரப்பு புகார்
சென்னை மெரீனா போராட்டத்தை திசை திருப்ப சில சில அமைப்புகள், தீய சக்திகள் முயற்சித்து வருவதாக ஹிப்ஹாப் தமிழா ஆதி குற்றம் சாட்டியுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: மெரீனா ஜல்லிக்கட்டு புரட்சிப் போராட்டத்தை சிதைக்க சிலர் சதி செய்வதாக ஹிப்ஹாப் தமிழா ஆதி வீடியோ மூலம் வெளியிட்டுள்ள தகவல் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
இதுதொடர்பாக அவர் பேஸ்புக்கில் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில் I am safe and this is my stand என்று போட்டு வீடியோவில் பேசியுள்ளார் ஆதி.

அந்த வீடியோவில் அவர் மெரீனா போராட்டத்தை திசை திருப்ப சிலர் சதி செய்கிறார்கள். சில அமைப்புகள் போராட்டத்தை சிதைக்கவும்,திசை திருப்பவும் முயல்கின்றன. தேசத் தலைவர்களை ஆபாசமாக திட்டுவது சரியானதல்ல என்று கூறியுள்ளார் ஆதி.
போராட்டத்தைக் கலைக்க சில தீய சக்திகள் முயன்று வருவதாகவும் ஆதி குற்றம் சாட்டியுள்ளார்.
ஆதியின் வீடியோ பேச்சு:












Click it and Unblock the Notifications