டி.ஆர். பாலு "மருமகள்" சொன்னதை கவனிச்சீங்களா.. அமைச்சராக டிஆர்பி ராஜா பதவியேற்றதுமே.. ஓடோடி வந்த மகன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டின் தொழில்துறை அமைச்சராக மன்னார்குடி எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா புதியதாக பொறுப்பேற்றுள்ள நிலையில், அவரது குடும்ப உறுப்பினர்கள் இது குறித்து தங்களது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.

கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைத்தது. இதனையடுத்து அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றது. ஆனால் அமைச்சர்கள் சிலரின் செயல்பாடுகள் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டன. குறிப்பாக பால்வளத்துறை அமைச்சர் நாசரின் செயல்பாடுகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

His son is happy that his father TRB Raja has been elected as the minister

பால் உற்பத்தியாளர்களின் குறைகளுக்கு தீர்வு காணாமல் இருந்தது, ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டது, ஆவின் பால் கொள்முதலில் ஏற்பட்ட விமர்சனங்கள் ஆகியவை நாசருக்கு எதிராக பெரும் குற்றச்சாட்டாக உருவெடுத்தது. ஒரு கட்டத்தில் பால் உற்பத்தியாளர்கள் தமிழ்நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவெடுத்தனர். 10 ஆண்டுகளுக்கு பின்னர் ஆட்சியை பிடித்த திமுக தனது ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள தொடர்ந்து முனைந்து வரும் நிலையில் இதுபோன்ற விமர்சனங்கள் கட்சி தலைமைக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியது. இந்த விமர்சனங்களை பயன்படுத்திக்கொண்டு பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் அரசியல் செய்ய தொடங்கின.

ஏனெனில் பால்வளத்துறையில் அவ்வளவு பிரச்னைகள் இருந்தன. தமிழ்நாட்டில் நாளொன்றுக்கு சுமார் 3 கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் ஆவின் நிறுவனம் 36 லட்சம் லிட்டர் பாலைதான் கொள்முதல் செய்கிறது. இதற்கு முன்னர் இருந்த அதிமுக ஆட்சியில் 46 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டதாக பால் உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். ஆக இதுதான் இவர்கள் மத்தியில் எழுந்த முதல் அதிருப்தி. இரண்டாவது அதிருப்தி கொள்முதல் விலை.

சரி பாலைதான் குறைவாக கொள்முதல் செய்கிறீர்களே, கொள்முதல் விலையையாவது தனியாருக்கு சமமாக கொடுங்கள் என்று கோரிக்கை வைத்தனர். மனு எழுதி, கவன ஈர்ப்பு கூட்டம் நடத்தி, ஆர்பாட்டம் நடத்தி வலியுறுத்தின. அப்போதும் துறைசார்ந்த அதிகாரிகள் கண்டுக்கொள்ளவில்லை. எனவே பால் உற்பாத்தியாளர்கள் கடைசியாக வேலை நிறுத்தத்தில் இறங்கினர். எங்களது கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளவில்லை எனில் ஆவினுக்கு பால் தர மாட்டோம் என்று கூறினர். இதனையடுத்து பால் வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் பால் உற்பத்தியாளர் சங்கத்தினரை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். இதில் உற்பத்தியாளர்கள் சில கோரிக்கைகளை கறாராக வைத்தனர்.

அதாவது தனியார் நிறுவனங்கள் பசும்பாலுக்கு ரூ.42-45, எருமை பாலுக்கு ரூ.65 என கொடுக்கின்றனர். ஆனால் ஆவின் ஒரு லிட்டர் பசும்பாலுக்கு ரூ.32, எருமை பாலுக்கு ரூ.42 மட்டுமே வழங்குகிறது. எனவே ஆவினில் பால் விநியோகிக்கும் எங்களுக்கு 7 ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். ஒருவேளை ஆவின் இக்கோரிக்கையை ஏற்க மறுத்தால் எல்லா பால் உற்பத்தியாளர்களும் தனியாரை நோக்கி நகர்வார்கள். பின்னர் அவர்கள் வைத்ததுதான் சட்டம் என்று ஆகிவிடும். இதற்காக ஆவினை பலப்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது என்றும் கூறியிருந்தனர். இந்த விவகாரத்தில் அமைச்சர் தரப்பு கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

எனவே பால் உற்பத்தியாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவியது. எனவே விரைவில் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என்கிற நிலை உருவானது. மறுபுறம் தனியார் பால் உற்பத்தியாளர்களை நாசர் ஆதரிப்பதாகவும் புகார்கள் எழுந்தது. இதையெல்லாம் கவனித்து வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக அமைச்சரவை மாற்றத்தை அறிவித்தார். இதனையடுத்து பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வசம் மாற்றப்பட்டது. அதேபோல தொழில்துறை திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலுவின் மகன் டி.ஆர்.பி.ராஜவிடம் ஒப்படைக்கப்பட்டது.

His son is happy that his father TRB Raja has been elected as the minister

டெல்டா மாவட்டத்திலிருந்து ஒரேயொரு அமைச்சர் கூட இல்லை என்று ஏற்கனவே பல விமர்சனங்கள் எழுந்தது. இதனையடுத்து மன்னார்குடி தொகுதியிலிருந்து மூன்று முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட டி.ஆர்.பி.ராஜாவுக்கு புதியதாக அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது. இன்று ஆளுநர் மாளிகையில் அவருக்கு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அவரது தாய், மகள் மற்றும் மகன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இந்நிலையில் அவரது மகனிடம் செய்தியாளர்கள் பேட்டி எடுக்கையில், "தந்தைக்கு அமைச்சர் பதவி கிடைத்தது மகிழ்ச்சி" என்று கூறியுள்ளார். அதேபோல "இது எப்போதோ கிடைத்திருக்க வேண்டிய பதவி" என்று அவரது மனைவி கூறியுள்ளார். முன்னதாக தமிழக அமைச்சர்கள் பதவியேற்றபோது இவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்று தெரிந்ததும் "எனக்கு பதவி குறைப்பு எதுவும் இல்லை. மன்னார்குடி மக்களின் இதயத்தில் இடமிருக்கும். ஆனால் அமைச்சர்களே வாக்குறுதியை நிறைவேற்ற தவறினீர்கள் என்றால் என் அன்பு தாய்க்கிழவிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்" என்று நகைச்சுவையாக ட்வீட் செய்திருந்தார். அதற்கு பலரும், "ராஜாக்கள் மந்திரியாவதில்லை" என்று ட்வீட் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+